Tuesday, August 11, 2009

அடுத்தது என்ன?

இது என் டியாரி மாதிரி, எப்போதாவது இருந்திட்டு மாதம் மாதம் நினைவு வரும் போது, வலிக்கு விடை தேடி நான் தொடரும் பதிவுகளில் ஏதாவது புது வியாக்கியானம், இல்லை விளக்கம் இருக்கா என்று பாத்திட்டு போவன்.
http://kalaiy.blogspot.com/2009/08/blog-post_11.html தான் இந்த முறை ஆறுதலா இருந்துச்சு...
இப்ப வடக்கின் வசந்தத்தில் முக்கிய பங்கு ஆற்ற தானாவே கொண்டாந்து விட்டிருக்காங்கள். நான் யார் என்று தெரிஞ்சு விட்டிருக்கான்களோ, இல்லை தெரியாமலே விட்டிருக்கான்களோ... இப்ப திடீர் கடத்தலின் பின்னர் தான் குழம்பிப் போயி யோசிக்கிறன்.

ஒருகாலத்திலை எல்லார் கருத்தையும் மதிக்கிற நான், என்றைக்கு அண்ணா வழி தான் முடிவு என்று நினைத்தனே அன்னிலிருந்து எதுக்கும் யோசிக்கிறதில்லை, ஆனால் இன்றைக்கும் பலமா இருக்க முடியும் என்று உறுதி மொழி கிடைச்சும் நான் ஏதோ யோசிக்கிறன்... காரணம் அவருக்கே இப்படி காட்டிகொடுப்பு என்றால்? நான் எல்லாம் இவங்களுக்கு எம்மாத்திரம்...
நல்ல காலம், இப்ப என் மக்களோடு இருக்கிறது மட்டும் ஒரு ஆறுதல்... வெடித்து நின்மதி அடையும் பாக்கியமும் எனக்கு தரப்பட்டில்லை...

என்ன தான் இருந்தாலும் கனவுகளோடு கடைசி நிமிடமும் என்னையும் நினைத்து தான் விடை கொடுத்திருப்பாள் என் தங்கை... அவளின் கலையாத அதே கனவுகளுக்கு ஆயுதம் தாங்கியோ தாங்காமலோ விடை காணும் முடிவு மாறப் போவதில்லை - தங்கம் உன் மேல் சத்தியமாய் சொல்கிறேன்...

சும்மா புலம்போனும் போல இருந்துச்சு.. புலம்பி முடிச்சிட்டன்...
தன் கையே தனக்கு உதவி...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....
ஆனாலும் ஒரு சந்தோசம் இன்னும் புலத்திலை இல்லாத மன எழுச்சியை முகாங்களில் முடங்குப் பட்டு இருந்தாலும் காண்கிறேன்..
எத்தனையோ புத்திஜீவிகள் யுத்த கைதிகளாக நடத்தப் படாமல் ஈவிரக்கம் அற்று கொன்றழிக்கப் பட்டிருப்பினும், அவர்கள் தந்த இன்னுயிர் எங்களில் பலரை அவர் போல் வர வேண்டும் என்று தூண்டசெய்கிறது...
வெளியில் வருவோம் என்று தெரிந்திருந்தும் உண்மையுரைத்த மருத்துவர்கள் போல வரவேணும் என்று ஒரு பத்து வயது அப்பாவை இழந்திட்டு முகாமிலை இருந்து சொல்லுறதை கேட்டும் போது, மீண்டும் மீண்டும் விடுதலை தேடி போக உறுதி கிடைக்கிறது...
ஆனாலும் இப்போது நேரம் எங்களுக்கு சரியில்லை என்ற சின்னப் பிள்ளை கருத்தோடு உலாவருகிறேன்...
எரிமலை அடங்கினால், மீண்டும் உக்கிர வேகத்தோடு வெடிக்கும் காலம் வந்து தான் ஆகும்...
வெளிலை ஒருவர் மட்டும் இல்லை, இன்னும் பல பேர் இருக்கினம்.. ஆனால் எந்தளவுக்கு கை தருவினமோ தெரியேல்லை... எனக்கு சில மாதம் முன்னர் அறிவுரை தந்த பெரியாரை இப்ப காணவே முடியேல்லை... எழுத்துக்களுக்கும் பலம் இழந்து போச்சுதோ தெரியேல்லை... எழுதி கிழிக்கிறதுக்கு இப்ப ஒன்றும் இல்லை.. கன பேருக்கு வரலாறு தெரியும், ஆனால் புது வரலாறை நாங்கள் படைத்தால் தாங்கள் கைகட்டி பாப்பம், துஉற்ருவம் என்றதில்லை இருந்து என்றைக்கு மனமார மாறுகினமோ அன்றைக்கு தெற்கு நிலைகள் பத்தி எரியும்...
ஆனால் இன்னும் கொஞ்ச காலம் இருக்கு இந்த மனநிலை மாற்றத்துக்கு...

யாரவது இன்னும் உங்கள் உறவுகளை தேடித் பிடிக்க உதவி தேவைப் படின் தொடர்பு கொள்ளவும், அரச உதவியோடு தேடமுடியும்...

Thursday, June 18, 2009

நெடு நாள் உண்மைகள் உறங்குவதில்லை.

நான் இப்போதெல்லாம் மற்றவர்கள் இணையங்களில் எழுதி பிரசுரிக்கும் கட்டுரைகளை படித்து குழம்புவதில்லை. காரணம், நான் செய்யவேண்டிய கடமை இப்போது மக்களுக்கு ஒரு கை சோறு குடுப்பது தான். ஆனால், சில எனக்கு சரி என்று பட்ட, இந்த புறம்போக்குகள் இன்றைக்கு விவாதிக்கின்ற தேவையற்ற விடயம் பற்றி, என் நண்பர்களுக்கு ஒரு தெளிவு தரவே இதை பதிவிலிடுகிறேன்.
எங்கள் தலைவன் எல்லாரையும் நம்புபவன் இல்லை, கடவுளுக்கு சமமாக நான் மதிக்கும் அவர் யாரையாவது நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், அதன் நம்பகத்தன்மையை நாங்கள் சந்தேகிக்க அருகதை அற்றவர்கள். அது மட்டும் அல்ல, சில விடயங்களில் உன்னிப்பாக எங்களுக்கு முழுமையான விளக்கம் மற்றவரால் தரப் படும் பொது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் அவர் மேற்கொண்ட முடிவுகளும், அவர் உலக தொடர்பாளருக்கு கொடுத்த பொறுப்புக்களும் அளப்பரியன. சில இடங்களில் தலைவரின் தூரதரிசன நோக்கை சந்தேகித்த சில தலைவர்கள் முன்னையவருடன் சேர்ந்து எடுத்த அவசர முடிவுகள் துயரமாய் முடிவடைந்தது ஏதோ உண்மை தான். அது நிற்க, ஆனாலும் தலைவரின் ஈழம் நோக்கிய நோக்கு என்றும் பொய்த்துப் போனதே இல்லை. தந்தை செல்வாவால் முன்மொழியப் பட்ட தமிழீழம், அதே காலத்தில் எங்கள் தலைவன் வழியில் தோன்றி வளர்ந்து ஒரு கொரில்லா + மரபு போராட்டத்தின் உச்ச வரம்பை அடைந்து நிற்கிறது. இனிமேல் அதே படை உலக அங்கீகாரத்துடன் மட்டுமே எங்கள் நாட்டுப் படை, அரசு என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை விரைவில் எதிர்கால அரசியல் முன்னகர்வுகளும், மீள் கட்டுமானத்துடன் சாவிலும் கூட சாதிக்கும் எங்கள் படை நடத்தும் சகோதரர்களும் நிரூபிப்பார்கள். தயவுசெய்து மாற்றீடு, வேறு என்ன வழி இருக்கு என்றெல்லாம் வீணே உங்கள் மூளையை குழப்பாமல், இதுவரை கட்டியணைத்திட்ட உங்கள் கரங்களை நீட்டியபடியே இருங்கள். உங்கள் ஆதரவு, உங்கள் ஒற்றுமை என்று பிரித்து சொல்லக் கூடாது, எங்கள் ஒற்றுமை தான் இப்ப இருக்கிற ஒரே பலம்.
மக்களோடு மக்களாய் சென்று வாருங்கள் என்றவர் தன்னால் முடிந்தவரை இப்போதும் செய்து கொண்டு தான் இருக்கிறார், இனியும் செய்வார். காய் நகர்த்தல்களின் முடிவில் உண்மைகள் உறங்காது. ஆனால் வேறும் சின்ன மூளையை வைத்து கொண்டு இலைமறை காய்களை கண்டு பிடிக்க முடியாது என்று வெறும் பிதற்றல்களை தங்களின் எதிர்வுகூறல் என்று கூறும் வயதுக்கு வந்த சிறியோர் உணரவேண்டும், இல்லாவிட்டால் மாற்றோருக்கு உணர்த்தப் படும் காலம் வரும் வரை சற்றே பொறுமை வேண்டும்.

உங்கள் கரங்கள் எங்கள் கரங்கள் என்றும் மாதிரியே ஒலித்து கொண்டே இருக்க வேணும். அது தான் கனவுகளோடு உறங்கும் எங்கள் முப்பத்து ஐயாயிரம் புனிதர்களுக்கும், இரண்டு இலட்ச்சத்துக்கும் மேற்பட்ட அணைந்த அணைத்த கரங்களுக்கும் நாங்கள் செய்யும் மிகப் பொரும் கைம்மாறு.

தீர்க்க தரிசனம் எல்லாருக்கும் இல்லை. அது சில கடவுளரலேயே முடியும், அவர் தம் பிரதிநிதி கூட சில தவறு இழைக்கலாம், ஆனாலும் கொள்கையில் மாற்றமோ, இலக்கில் மறுவோ வரப் போவதில்லை. சில சிறு தவறுகள், அவசர முடிவுகள் தந்த பிரதிபலனையும் நமைக்கே மாற்றும் திறன், மற்றும் நீண்ட கால பார்வையில் இருக்கும் தெளிவும், பதற்றம் இல்லாத மிக முக்கியமான கொள்கை வெறியும் பணத்துக்கு அடிமைப் பட்டுவிடும் என்று பகல் கனவு காண்பது அபத்தம். சாதரண எல்லா மக்களாலும் முடியாத செயல்களை முடிந்தவரை கண்டு பிடித்து ஒப்படைத்த தலைவர், கடைசி வரை வெற்றி பாதையில் இருந்து விலகிவிட மாட்டார். பொறுத்திருங்கள், எங்கள் தனி நாடு நோக்கிய துயரப் பாதையில் இலக்கை அடையும் காலம் தான் எங்கள் உறுதி வைரமாகும் காலம், அது தான் இந்த காலம், நாங்கள் போலிகள் இல்லை, நிஜங்கள் என்பதை மனதில் இருத்தி, கூட இருந்து கரம் நீட்ட கூடிய எல்லை இது தான் என்று வரையறை இல்லா கடல் அலை போல எல்லை கடந்து நில்லுங்கள் எல்லாத் தேசத்திலும் இருந்து வந்து தென்றலாய் கலக்கும் தாயகத்து தோன்றல்களே!!!

Friday, May 8, 2009

தென் இலங்கை தமிழ் மாணவர் அமைப்பு

வீரத்தமிழ்நாட்டு அன்னையே! எம் சோகங்களும் எமக்கான கொடுமைகளும் அடக்குமுறைகளும் உச்சக்கட்டத்தை அடைகையில் உன்னைத்தான் தஞ்சம் எனப் புகுகிறோம். ஏனெனில் எம் சகோதர உறவுகள் எங்கள் தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தானம்மா எங்களிற்காக கண்ணீரை மட்டுமல்ல உயிரைக்கூட விடுகிறார்கள்.
ஜயோ! எங்கள் உறவுகள் இரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கே அவர்கள் முள்ளிலும் கல்லிலும் தூங்குகிறார்கள். நாங்கள் வேதனைத்தீயில் வெந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் பல்கலைக்கழகப்படிப்பிற்கு SriLanka தலைநகர்வந்து போக்கிடம் அற்று புலம்பித்திரிகிறோம். நாம் இங்கு எமது மொழியில்க்கூட பேச அனுமதி இல்லை. எமக்குத் தங்குமிட வசதிகளும் இல்லை. எம்மை கீழின விலங்குகள் என இழிவு படுத்துகிறார்கள். நாம் சிங்களக் காடயரால் (மாணவர்தான்) தாக்கப்படுகிறோம். எம்மை அடிக்கடி கைது செய்வது இராணுவ வதை முகாம்களிற்கு கொண்டு செல்வது அங்கே எம்மை எமது ஊரிற்குப் போகச் சொல்கிறார்கள். இது சிங்கள பௌத்த நாடாம் எம்மைத் தமிழ் நாட்டிற்குத் துரத்தப்போகிறார்களாம். இங்கு நாம் தமிழர் என்பதற்கான எந்த ஒரு அடயாளமும் இல்லாமல்த்தான் வாழ முடியும். வீதிக்கடைகளில் பொருள் வாங்கச் செல்ல முடியாது. அவர்கள் எம்மைத் தமிழர் என அடயாளம் கண்டால் எதுவும் நடக்கலாம். பயணம் செய்யும்போது சோதனைச்சாவடிகளில் எம்மைக் கைது செய்து சித்திரவதை செய்வார்கள், துப்புவார்கள். எமக்குத்தங்குமிட வசதியில்லை.

பல்கலைக்கழகத்திற்கு 30 Km ற்கு அப்பாலுள்ள தமிழர் வாழும் பகுதிகளில் இருந்துதான் பல்கலைக்கழகம் சென்று வருகிறோம். இங்கேதான் வெள்ளை வானின் கடத்தல் வேட்டை எம்மினத் துரோகிகளால் நடத்தப் படுகிறது. இங்கிருந்து தான் தமிழர் பலாத்காரமாக ஒரு நாளில் வெளியேற்றப்பட்டோம். சக வேற்றின மாணவனிற்க்குத் தேவையான வாழ்க்கைச்செலவிலும் அதிகம் நாம் கொடுக்கும் வாடகைப்பணம் மட்டும். அடிப்படை வசதிகள் அற்று அநாதைகளாகவே உள்ளோம் இங்கே.

பிஞ்சுக்குழந்தைகளின் எரி உடலங்களையும் பெண்களின் எரி உடலங்களையும் எமக்குக்காட்டி உங்களின் கதை முடிகிறது எனக்கூறி சிரிப்பார்கள். பார்க்கும்போது எப்படிக் கண்ணீரை அடக்குவது? நாவை அடக்கலாம். தாக்குவார்கள் எமது பெண்பிள்ளைகளைப் பார்த்து இவர்கள் இராணுவத்தினருடைய விருந்தாம். தமது பாதுகாப்புச் செயலாளர் சொன்னாராம் என்கிறார்கள்.
நாம் இங்கு எமது சொந்தப் பெருமை இழந்து சுருண்டு கிடக்கிறோம். வீரமிருந்தும் வெறியிருந்தும் நமது தாய் மண்ணிற்குப் போக முடியாது மூலைக்குள்ளே மூச்சுத்திணற முடங்கியிருக்கிறோம். உலகவாழ் தமிழர் அனைவரும் ஒன்று பட்டுப் போரிட்டு ஆரியர்- திராவிட யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டு வரும் இந்தப் புரட்சிக் காலத்தில் தமிழைக் கூடக் கதைக்காமல் பிணமாகத் திரிகிறோம். நாம் இங்கு பேசாமல் இறந்து விடலாம் எனத் தோன்றுகிறது. ஆனால் நாம் இறந்தால் சக மாணவரின் கதி சித்திரவதையால் எப்படி இருக்கும்?

பல்கலைக்கழக வளாகத்தில் பதாதைகள் தொங்குகின்றன, தமிழரின் குருதியால் Srilanka வினைத் துப்பரவு செய்யப் போகிறார்களாம். பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் போது எங்கள் நிலை எப்படி இருக்கும்? இங்கே சிங்களவரில் விரிவுரையாளர், மாணவர், காவலாளி என்று ஒரு பேதமுமில்லை, தமிழ் மாணவர் விடயத்தில். எம்மை இங்கு ஏளனம் செய்கிறார்கள்.
நாம் இங்கு பரீட்சைக் காலத்தில் கூட இரவு நேரங்களில் படிக்க முடியாது. அடையாளம் கண்டு வந்து தாக்குவார்கள். ஜயோ! நாம் செய்த பிழை ஒன்று தான். எம்மிலும் திறன் மிகுந்த மாணவர்கள் எல்லாம் கல்விச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி களமாடச் சென்ற போது நாம் இங்கு பல்கலைக்கழகம் வந்ததுதான். இப்போது இந்தத் திறந்த வெளிச் சிறைச்சாலையை விட்டுப் போகவும் முடியாது. இங்கு உணர்வுகளை அடக்கியே அடங்கிப் போகின்றோம். ஊருலகம் அறியாமல் அடக்கமும் செய்யப்படுகின்றோம்.
ஜயோ! எங்களின் உறவுகள் எங்கு என்று கூடத் தெரியாது. இங்கே எமக்கு சிவப்பு நிறத்தில் புத்தகம் இருந்தால் கூட சிந்தனையெல்லாம் ஊரில் தான்.
ஜயோ! துப்பாக்கிகள் பேனாக்களை அடக்கி விடுகின்றன. இதை எழுதிக் கொண்டிக்கும் போது கூட நாம் கடத்தப்படலாம். உங்களால் தான் முடியும் எங்கள் பிரச்சனையை வெளியே சொல்ல. எங்களிற்கு நாட்டைத் தந்து காப்பாற்ற நாங்கள் உரிமையுடன் கேட்கும் ஒரே உறவுகள் நீங்கள் தானே! முத்துக்குமாரன் அண்ணாவினைப் பெற்றெடுத்த பூமியல்லா எமக்கு இருக்கிறது. இந்த ஒன்று தான் இன்று எமக்கு.

இங்ஙனம்,
மொழிச்செழியன்.
செயலாளர், தென் இலங்கை தமிழ் மாணவர் அமைப்பு. (Tamil Students' League of Southern-Lanka -TSL Southern-Lanka)

Wednesday, May 6, 2009

எங்கள் கருத்துக்களை இப்படியும் விதைத்தால் என்ன?

உலகமக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பினால் உலக அரசுகளும் அனைவருக்கும் தெரிந்த பகீரங்க உண்மை என்று விரைந்து கவனம் எடுக்கலாம் இல்லையா? IPL போட்டிகள் நடக்கும் மைதானங்களில் எங்களவர் ஒருசிலராவது சில இனப்படுகொலையை சித்தரிக்கும் ஆடைகள், கொடிகள் என்று வெளிக்காட்டலாம் தானே.... கொஞ்சம் ஆபத்தான வேலை தான், ஆனால் நியாயப் படுத்தலாம். அப்பிடியே தேர்தல் பிரச்சாரக் கூடங்கள், கண்காட்சிகள், நாளாந்த மக்கள் கூடும் சந்தைகள், ஞாயிறு சந்தை, கல்லூரிகள் என்று, மற்றவர் கவனத்தை ஈர்த்து, எங்கள் கருத்துக்களை விதைத்தால் என்ன? நான் போடும் t-shirt, நான் என்ன படம் வரைந்திருந்தால் தான் மற்றவருக்கு என்ன? ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் மட்டும் அணியும் அந்த ஆடைகளை பொது இடங்களுக்கும் அணிந்தால், சில நேர் விளைவுகள் கிடைக்கப் பெறலாம் தானே?

Sunday, April 26, 2009

விடுதலையான உதயன் ஆசிரியரின் பேனாவிலிருந்து...


அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன்.

அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத காலத்துக்கு அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றார் என்பது இன்று அப்பட்டமாகி யிருக்கின்றது; அம்பலமாகியிருக்கின்றது.

இந்தக் கைதும், அது இடம்பெற்ற முறையும், இடம்பெற்ற வேளையும், அதையொட்டி என்மீது அதிகார வர்க்கத்தினால் அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், இவ் விடயத்தையொட்டிய விசாரணைகள் சுமார் இரண்டு மாத காலத்துக்கு இழுத்தடிக்கப்பட்ட போக்கும் இந்த அதிகார அராஜக அத்து மீறலின் பின்னணியில் அரசியல் உள் நோக்கமும் பழிவாங்கலும் பிரதான காரணங்களாக இருந்தன என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமானவை.

பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக்கோரமான பேரவலத்தையும் பேரனர்த்தத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கும் பெருந்துயர்மிக்க இச்சமயத்தில்,

இந்தக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகவும், கூர்ந்தும் அவதானிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ள இச்சூழலில் தம் இன மக்களின் பேரவலம் பற்றிய உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் உலகுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் முரசறைந்து உணர்த்தும் களப்பணியில் வர லாற்றுப் பொறுப்பில் கண்துஞ்சாது ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு பத்திரிகை ஆசிரியர், அச்சமயத்தில் அப்பணியில் ஈடுபடவிடாது திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்படும் விதத்தில் தடுப்புக்காவலில் கம்பி எண்ணவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்.

இனப்பிரச்சினையையொட்டிய யுத்தம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள இச் சமயத்தில் அது குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும், களநிலைமை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய செய்தி மூலமாகத் திகழ்பவர்கள் என்போன்ற ஊடக உயர் மட்டத்தினரே என்பது வெளிப்படையானது.

அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவரை இச்சமயத்தில் அபத்தமான குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தமையும்
அந்தக் கைதையொட்டி அதிகார வர்க்கத்தினர் கிளப்பிவிட்ட "புலித்தொடர்பு" என்ற கற்பனைக் குற்றச்சாட்டும் இந்தக் கைதுத் திருவிளையாடலின் பின்னணியில் புதைந்து கிடக்கக்கூடிய உண்மைகளையும் நோக்கங்களையும் நீங்களே ஊகித்துக்கொள்ளப் போதுமானவை எனக் கருதுகிறேன்.

கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்பு வரை தமது விமானத்தில் வந்து தாக்குதல் நடத்திய புலிகளின் நடவடிக்கையுடன் நான் தொடர்புபட்டிருந்தேன் என்பதே அரசின் அதிகார தலைமையினால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

ஓர் ஊடகவியலாளன் என்ற முறையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, செய்தித் தரப்புகளோடு தொடர்பு கொண்டு, தகவல்களைச் சேகரித்து வெளியிட்டமை தவிர அதற்கு அப்பால் இவ்விடயத்தில் நான் சம்பந்தப்படவுமில்லை; அத்துமீறிச் செயற்படவுமில்லை.

இப்போது அது விசாரணைகளில் தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது; உண்மை வெளியாகியிருக்கின்றது.

எம்மைப் பொறுத்த வரையில் செய்தியாளர்கள் என்ற முறையில், அரச மற்றும் படை உயர் மட்டங்களில் இருந்து, ஏனைய அனைத்துத் தரப்பினர்களுடனும் செய்திகளுக்காகத் தொடர்புகளை பேணுவது எமது தவிர்க்க முடியாத பணியாகிறது. அத்தகைய கடமைப் பொறுப்புகளுக்கப்பால் எத்தகைய தவறான அல்லது சட்ட விரோதமான செயற்பாடுகளையும் நான் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானதாகும்.

அன்றையதினம் எனக்கு வந்த அல்லது நான் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்தே முதலில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் உள்ளூரிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த அல்லது நான் அவற்றுக்கு மேற்கொண்ட சுமார் இருநூறு வரையான தொலைபேசி அழைப்புக்களின் மூலத்தைக் கண்டறிவதற்கு மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒருவாரகால அவகாசம் அதிகம்.

ஆனால் அந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே மேற்படி தாக்குதல் சம்பவ சமயத்திலோ அல்லது அதற்கு முன்னர் சுமார் இரண்டு மாத காலத்திலோ குற்றமிழைக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடிய தொலைபேசி அழைப்புகளுடன் நான் சம்பந்தப்பட்டேன் என்று சந்தேகிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை என்பதை என்னை விசாரணை செய்த பொலிஸார் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டனர்.

தொலைபேசி அழைப்புகள் பற்றிய விசாரணை முடிந்ததும் எனது வங்கிக் கணக்குகள் துருவப்பட்டன. எனது மனைவியின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. "பயங்கரவாதிகள்" மூலம் தவறான வழியில் நான் வருமானம் ஏதும் ஈட்டிக்கொண்டேனா என்பதைக் கண்டறிய எனது சொத்துக்கள், உடைமைகள் ஆய்வு செய்யப்பட்டன. நான் விற்ற, வாங்கிய சொத்துகள் குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சகல சமாதானப் பேச்சுகளின் போதும் ஊடகவியலாளன் என்ற முறையில் நேரில் பிரசன்னமாகி செய்தி சேகரிக்கும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிட்டி வந்திருக்கின்றது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்திருக்கின்றேன். தவிரவும் மூத்த ஊடகவியலாளருள் ஒருவன் என்ற முறையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கின்றேன்.

இந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள், அவற்றின் காரணங்கள், அதற்கான நிதி மூலம் குறித்தெல்லாம் துருவினார்கள்.
எதிலும் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இரண்டு மாத காலத்தில் இலங்கைப் பாதுகாப்புப் பிரிவின் நான்கு புலனாய்வுத் துறைகளும் என்னைப் பற்றி நடத்திய விசாரணைகள் நான் குற்றவாளி அல்லன் என்பதை நிரூபித்தமையால் வேறு வழியின்றி வழக்கு ஏதும் தொடராமலேயே என்னை விடுவிக்க வேண்டிய நிலைக்கு ஆட்சித் தரப்பு தள்ளப்பட்டது.

என்னைப் "பயங்கரவாதி" ஆகப் பிரகடனப்படுத்தும் அதிகாரத் தரப்பின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடு, அவற்றின் பின்புலத்தில் புதைந்து கிடக்கும் சூக்குமங்கள், அபத்தமான குற்றச் சாட்டுகள் போன்றவை மொத்தத்தில் நகைப்புக்கிடமானவை. அவற்றை விவரிப்பின் அது நீண்டு செல்லும்.

எனக்கு நேர்ந்த இந்த அவலத்துக்காக யாரையும் பழிவாங்கும் வெஞ்சினம் எனக்குக் கிடையாது.

அத்தோடு இன்று எமது தமிழ்ச் சகோதரர்கள் அனுபவிக்கும் பேரின்னல்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு நேர்ந்த அவல அனுபவம் பெரும் சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே.
எனவே, தமிழர் தம் இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில் ஓர் ஊடக நிறுவனமும் அதன் பொறுப்பான பணியாளர்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயங்களில் ஒன்றாக இதனைக் கருதி, எமது பணியைத் தொடர நாம் திடசங்கற்பம் கொள்வதே எமது கருத்தாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஆனால், இத்தகைய அழுத்தந் தரும் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்கள் என்ற முறையில் நானும் "உதயன்", "சுடர்ஒளி" தினசரிகளில் என்னுடன் பணியாற்றும் எனது சக ஆசிரியபீட ஊழியர்களும், ஏனைய அலுவலர்களும் மற்றும் நிர்வாகத்தினரும் அவ்வப்போதும் தொடர்ந்தும் எம்மால் இயன்றவரை எமது கடமைகளைத் தொடர்வோம் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன்.

கொழும்பில் இரண்டு மாதகாலம் நான் தடுப்புக் காவலில் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், யாழ்ப்பாணத்தில் தங்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக "உதயன்" ஆசிரியர் பீடத்தின் தூண்களான இரு உயர் அலுவலர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக "உதயன்" அலுவலகத்துக்குள் தங்களைத் தாங்களே முடக்கி சிறைக் கைதிகளாக வைத்துக்கொண்டு ஆற்றும் பணியில்தானே உங்கள் "உதயன்" திட்டமிடப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைக்கூட எதிர்கொண்ட பின்னரும் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா?

நன்றி

இந்த நெருக்கடியான சமயத்திலும் எம்முடன் தோள் கொடுத்து ஆதரவு தந்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.

* எத்தகைய நெருக்கடி வரினும் அஞ்சாது பத்திரிகையைத் தவறாது வெளியிட வேண்டும் என்ற தமது நெஞ்சுரத்தை, படுகொலை இரத்தக் களரிகளுக்கு வழிவகுத்த அனர்த்த சம்பவங்களுக்கு நேரடியாக முகம் கொடுத்தசமயங்களில் கூடத் தயங்காது வெளிப்படுத்தி வரும் தமது வழமையான, துணிச்சல்மிக்க பாரம்பரியத்தை,எமது சக ஊழியர்கள் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமது ஆசிரியரை சீருடையினர் சகிதம் வெள்ளை வானில் வந்தோர் கடத்தி, அச்சுறுத்தி அதிர்ச்சி தந்த நிலையிலும் அவரைப் "பயங்கரவாதி" ஆகக் குற்றம் சுமத்தி முன்னிலைப்படுத்தியும்கூட தமது கடமையைத் தவறவிடாது தங்களை சுதாகரித்துக்கொண்டு ஒருநாள் பின்னடைவுதன்னும் காட்டாமல் அதே தரத்தோடும், வீச்சோடும், உறுதித் தெளிவோடும் இச்சமயத்தில் "உதயன்", "சுடர் ஒளி" நாளிதழ்களைத் தவறாமல் வெளியிடுவதை உறுதி செய்த தைரியம்மிக்க எமது நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும்

* தடுப்புக் காவலில் இருந்த என்னை நேரில் வந்து சந்தித்து உற்சாகப்படுத்திய பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும்

* நான் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து எனக்காகக் குரல் எழுப்பிய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், ஊடக அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், பல் வேறு சமூக அமைப்புகள் ஆகிய தரப்பினருக்கும்

* என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டமை தொடர்பான விசாரணைக்காகப் பொலிஸாருக்கு ஒத்துழைத்த எனது நண்பர்கள், செய்தி மூலகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினருக்கும்

* என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்க உதவிய "இன்டர்போல்" நிறுவனத்துக்கும்

*என்னுடைய விடுதலைக்காக வற்புறுத்தி அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுத் தூதரகங்கள், இராஜதந்திரிகள்

* இரண்டு மாதத் தடுப்புக் காவலின் போது என்னைக் கௌரவத்துடன் நடத்தி, மரியாதை பேணி, அனுசரித்து நடந்த கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவு இயக்குநர் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய பொலிஸ் குழுவினருக்கும்

* நான் தடுப்புக்காவலில் வாடிய வேளை எனது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தைரியமும், உற்சாகமும் ஊட்டி தார்மீக ஆதரவு தந்த உள்ளூர் நண்பர்கள், உறவினர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் மற்றும் அன்பர்கள்

அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.

உங்கள் ஆசி மற்றும் ஆதரவுடனும், "உதயன்", "சுடர்ஒளி" சக ஊழியர்களின் ஊக்கத்துடனும் எனது ஊடகப் பணி தொடரும் என உறுதி கூறுவதுடன், அதற்கு இறைவனின் அருளையும் இறைஞ்சுகின்றேன்.

ந.வித்தியாதரன்
(ஆசிரியர் "உதயன்", "சுடர்ஒளி")

Wednesday, April 22, 2009

4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...

தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.

பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -

இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.

வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.

"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.

ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.

இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.

'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.

ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.

எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.

சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.

யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.

இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.

சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.

'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.

உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.

"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.

புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.

இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.

புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.

ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.

விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.

இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.

புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.

எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:

ஒன்று -

தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -

சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -

தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.

இரண்டாவது -

அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.

எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.

உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.

'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.

இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.

நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.

ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.

அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.

இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.

உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.

இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.

எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.

அதுதான் - "Post Conflict Scenario"

இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.

ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -

முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.

நான்கு விடயங்கள் முக்கியமானவை:

ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.

இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.

மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.

நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.

இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.

இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.

எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.

அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.

அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.

அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.

ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.

இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.

இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.

- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -

- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -

- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.

வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.

ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.

எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....

படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;

எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;

தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து!

தி.வழுதி

கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com

Monday, April 20, 2009

எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டிருக்கி

பதிப்புரிமை: வருண்ஜீவ்

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது.
எட்டுமணி நேரம் வியர்த்துக்கொண்டே இருந்தது. துடைப்பதற்கு டவல்கூட தேடவில்லை. மேஜையில் இருந்த வெள்ளை டிஷ்யூ தாள்களை எடுத்து அவ்வப்போது நெற்றியில், கழுத்துப் பகுதியில் வழிந்துகொண்டிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டார். அவரது தேவைகளை பார்த்துக் கொள்ளவென்று ""சேவைப் பணி அணி'' ஏதும் இருக்க வில்லை. அறை மூலையில் மண்பானையில் தண்ணீர் இருந்தது. தாகம் ஏற்பட்ட போது தானே எழுந்து சென்று எவர்சில்வர் குவளையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இவையெல் லாம் சின்ன விஷயங்கள்தான். ஆனால் போர்க்கள வெற்றிகளும், உலகத் தமிழரின் உள்ளங்களில் உயர்ந்து நின்ற தகைமையும், தன் கீழ் பல படையணிகள் -என ஆர்ப்பாட்டம் காட்டுவதற்கு அனைத்துமிருந்தும் அவர் இயல்பாயிருந்தார் என்பது மிகவும் பிடித்திருந்தது.
மிகவும் நகைச்சுவையான மனிதர்கூட 60 நிமிடம் பேசினால் 50 நிமிடம் கலகலப்பாக நகைச்சுவை ததும்பிடப் பேசும் ஆற்றல் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். அத்தகையோரை நமக்கு மனதாரப் பிடித்துவிடும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அப்படியொரு கதையாடி. தமிழ் சினிமா பற்றி பேச்சு வந்தபோது, ""எங்கட போராளிகளுக்கு ஹாலிவுட் சினிமா காட்டுவோம். ஆனா அந்த வெள்ளைக்கார பெட்டையளுக்கு மட்டும் கிராஃபிக்ஸ்ல தமிழ் உடுப்பு போட்டு விடுவோம்'' என்றார்.
பல்கலைக்கழகம் சென்று படிக்காத அவர், தன் முயற்சியால் ஆங்கிலம் படித்திருக்கிறார். நான் அவரை சந்தித்த காலத்தில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட புத்தகங்களைப் பற்றி தன் உரையாடலில் மேற்கோள்காட்டிக் குறிப்பிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. புத்தகங்களெல்லாம் படிக்க எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?' என்று கேட்டேன். வேலைகளையெல்லாம் எல்லோருக்குமாய் பகிர்ந்து கொடுத்துவிட்டேன். எனக்கு பெரிய வேலை, காயம்பட்டு நிரந்தரமாய் படுக்கையிலாகிவிட்ட போராளிகளை அவ்வப்போது பார்த்துக் கொள்வதும் புத்தகங்கள் படிப்பதும்தான்'' என்றார். என்னால் நம்ப முடியவில்லை. தலைசிறந்த நிர்வாகி தானே மாங்கு மாங்கென்று எல்லா வேலைகளையும் செய்து களைத்துப் போகிறவனல்ல. தகுதியானவர்களை அடையாளம் கண்டு -வள்ளுவர் சொன்னது போல் - "இதனை இதனால் இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடும் ஒப்பிலா நிர்வாகியாய் அவரை நான் கண்டேன்'. உண்மையில் ""தலைவன் என்கிறவன் இலட்சியத்தை மேலாண்மை செய்கிறவன், தினசரி வேலைகளை நிர்வகிக்கிறவனல்ல'' என்ற புகழ்பெற்ற மேலாண்மை விதியை அவரிடத்தில் நிதர்சனமாய் பார்க்க முடிந்தது.
உணவு இடைவேளையின்போது பாட்டி ஒருவர் திடுமென உரிமையோடு உள்ளே வந்தார். பாதி பற்கள் போயிருந்த பாட்டி ஓய்வு பெற்ற ஆசிரியராம். சொத சொதவென வெற்றிலை பாக்கு சொதப்பிக்கொண்டே வந்தார். தலைவரிடம் வன்னி விளாங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் சிலவற்றை எடுத்துக் கூறினார். தலைவன்-மக்கள் உரையாடலாய் அவர்களின் பேச்சு இருக்கவில்லை. தாய்-மகன் போல், அக்கா-தம்பிபோல், குடும்பத்தில் ஒருவர்போல் உரிமையும், நேசங்களும் தோய்ந்த அந்த உரையாடலை இப்போது நினைக்க நெஞ்சம் நிறைந்து ஒரு வகையான ஏக்க உணர்வில் அடைக்கிறது.
உரையாடல் போக்கில் பாட்டியிடம் பிரபா கரன், "பாட்டி, உங்களிடம் எனக்கு எல்லாம் பிடிச் சிருக்கு. இந்த வெத்திலை பாக்கு பழக்கம் தவிர'' என் றார். பாட்டி பதிலெல்லாம் யோசிக்கவில்லை. பேசிக்கொண்டிருந்த அதேபோக்கில் பொலபொலவென பொரிந்தார். ""தம்பி... இஞ்செ பாருங்கோ... உம்மகிட்டேயும் எனக்கு பல விஷயங்கள் பிடிச்சிருக்கு. ஆனா இந்த வெத்திலெ பாக்கு விஷயத்திலெல்லாம் நீர் தலையிடறது எனக்கும் துப்புரவா பிடிக்கலெ''. ""வாழ்ந்தவர் கோடி, தாழ்ந்தவர் கோடி மக்களின் மனங்களில் நிற்பவர் யார்?'' என்ற புரட்சித் தலைவரின் பாடல் நினைவுக்கு வருகிறது. சாமான்ய மக்கள் எவரும் வேலுப்பிள்ளை பிரபாகரனை சர்வாதிகாரியாகவோ, ஏன் போராளி இயக்கத் தலைவராகவோ கூட பார்க்கவில்லை யென்பதையும், தங்கள் தம்பியாக -அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதையும் வன்னியில் நான் சுற்றித் திரிந்த அந்நாட்களில் அறிய முடிந்தது.
புகழ்ச்சி எல்லோருக்கும் பிடிக்கும். தலைவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். வேலுப்பிள்ளை பிர பாகரன் அவர்கள் எந்த அளவுக்கு புகழ் போதைக்கு அடிமையென்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை நான் நேர் கண்ட முக்கியமானவர்களில் மிகவும் நேர்மையான எளிமையோடு, தன்னுணர்வு சுயபிரக்ஞை இல்லாமல் அப்பட்டமான நேர்மை யோடு பதிலளித்த ஒரே மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்தான். ""தமிழீழ தேசியத் தலைவர் என்ற தகைமையை எவ்வாறு நீங்கள் உணர்கிறீர்கள்?'' என்ற எனது கேள்விக்கு அவர் தந்த பதில் காவியங்களைக் கடந்த வரலாற்றுப் பதிவாக நிற்குமென நினைக்கிறேன்.
இதோ பிரபாகரன் பேசுகிறார். ""பாருங்க ஃபாதர். இப்போ கனபேர் என்னைப்பற்றி கதை எழுதுறாங்கள். "பிரபாகரன் பிறப்பிலேயே வீரன், பதினைந்தாம் வயதிலேயே அவனுக்கு தமிழீழ கனவு பிறந்தது. பறவைகளை குறி தவறாது அவன் கொன்று வீழ்த்துவான். இப்படியெல்லாம் கதை எழுதுறாங்கள். உண்மையை சொல்லப்போனால் ஃபாதர் எனக்கு அந்த வயதில் தமிழீழமும் தெரி யாது, வடக்கு-கிழக்கும் தெரியாது. ஒண்ணும் பெரிதாகத் தெரியாது. வல்வெட்டித்துறை நூலகத்தில் நாளிதழ்களும் புத்தகங்களும் படிக்கிற மாணவர்கள் நாங்கள். ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில் ""தமிழ்பெண்கள் கற்பழிப்பு'', "சிங்கள காவல்துறை அப்பாவி தமிழர் மீது தாக்குதல், சித்ரவதை என்றெல்லாம் செய்திகள் படிக்கும்போது ரத்தம் கொதிக்கும். மனம்கிடந்து தவிக்கும். எதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கும். ""சாகிறதுக்கு முன்னம் ரெண்டு சிங்கள ஆர்மிக்காரனையோ போலீசையோ சுட்டுப்போட்டு சாகணும்'' என்று தான் வீட்டை விட்டு ஊரைவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.
எங்கள் இலட்சியம் அன்றைக்கு மிகச் சின்னது. தமிழர் படும் துன்பங்களுக்கெல்லாம் எங்களாலான சிறிய பதில் - ஓரிரண்டு பேரை பழி தீர்ப்பது. அப்படித் தான் புறப்பட் டோம். ஆனால் பயணமும் பாதை யும் பலவற்றை எங்களுக்குக் கற்றுத் தந்தது. முக்கியமாக தமிழீழம் என்ற கனவினைத் தந்தது. தமிழருக்கென தனியொரு நாடுதான் கொடுமைகள், துன்பங்கள், யாவிற்கும் தீர்வு என்ற புரிதலைத்தந்தது. எங்கள் மக்களின் பாசத்தாலும் போராளிகளின் தியாகத்தாலும் எமது மக்களுக்கான போராட்ட இயக்கமொன்றை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் கட்டி எழுப்பினோம்.
"பிறப்பால் போராளிகள் என்பதால் நாங்கள் போராட வரவில்லை. போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது' என்ற புரிதலில் நின்றுதான் எங்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுத்து வருகிறோம்.
""இன்னும் ஒருபடி தெளிவாகச் சொல்வதானால், தமிழீழம் அமைத்து, அதற்குத் தலைவனாக வேண்டும் என்ற எண்ணத்திலெல்லாம் நான் போராடவில்லை. உண்மையில் எனது காலத்தில் தமிழீழம் வரும் என்று கருதிக்கூட நான் போராட்ட களத்தில் நிற்கவில்லை. எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த உணர்வோடே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.''
அவரது பதிலை இன்று 7 ஆண்டுகளுக்குப்பின் நினைக்கிற போதும் சிந்தை சிலிர்க்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றி அவர் கொண்டிருந்த யதார்த்தமான புரிதல் தெளிவுகாண வியப்புணர்வொன்று விரிகிறது. அம் மாமனிதன் இன்று களமாடி நிற்கும் முல்லைத்தீவு காடுகள் நோக்கி மனக்கண்கள் திரும்புகின்றன.
கடந்த இதழைப் படித்துவிட்டு நண்பர்கள் சிலர் கவலையோடு கேட்டனர். இவற்றையெல்லாம் இப்போது சொல்வதால் உங்களுக்கு நாளை பிரச்சனைகள் வராதா என்று. நானோ, காலங்கடந்து எழுதுகிறேன் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறேன். எதைப்பற்றிய அச்சமும் எனக்கு இன்று இல்லை. நான் தமிழன், எனது இனம் உலகின் மிகப்பழமையான, உயர்ந்த பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட ஒப்பிலா இலக்கியங்கள் படைத்த, சுயமரியாதை கொண்ட, எட்டுகோடி உயிர்களைக்கொண்ட ஒரு மிகப்பெரிய தேசிய மக்கள் இனம் என் இனம். என் இனத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றழித்து, இன்று மேலும் அதே எண்ணிக்கையிலான மக்களை முல்லைத்தீவில் உயிரோடு புதைத்துவரும் கிராதக சிங்கள பேரினவாதிகளோடு சேர்ந்துகொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தில் ஒரு பகுதியினரும், பெரும் உலக சக்திகளும் என் இனம் சார்ந்த அம்மக்களின் போராட்டத்தை "பயங்கரவாதம்' என முத்திரை குத்துவது என் இனத்தையே சிறுமைப்படுத்தும் செயலாகும். குறைந்தபட்சம் என்னால் ஆனது அச்சமில்லா எதிர்குரல். ஒலிக்கும் அது எது வரினும்.

Friday, April 10, 2009

ஏன் எமக்கு மட்டும் இந்த நிலை? களத்தில் குதிக்க களத்தை நாமே அமைக்கலாம்

உலகத்தில உள்ள இனங்களில்ல நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணினம்? சில வேளை பத்தாம் நூற்றாண்டில், கடாரம் வென்ற பரம்பரைல எங்க தலைவர்கள் வேற இனங்களை அடக்கி ஆண்டு, அது இப்ப எங்க இனத்துக்கு நடக்குதோ? எப்படி தான் இருந்தால் என்ன வலிந்தவன் - பலமுள்ளவன் - வெல்வான் என்றது தலைவர் வாக்கு. அப்ப நாங்க என்ன இப்ப நலிந்தவராக மாறிட்டோமா என்று கேக்கிறதை விட, வலிமை சேர்க்க நான் எவ்வளவு உரம் போட்டிருக்கன் என்று கேளுங்கோ?

ஆயிரம் ஆயிரம் படை வரினும் அறமும் வீரமும் தோற்காது. ஆனால் அறமும் வீரமும் பதுங்கி இருந்தால், எதிரி பாய நினைப்பது வழமை தானே. செய்ய நினைத்தால், முடியாதது எதுவும் இல்லை.

காலத்தின் கட்டாயம் உங்களை சரியாக வழி நடத்துதா என்று ஒரு முறை சிந்தித்தால், மறுமுறை வழி தெரியும். போராட்டம் என்பது அரசியலையும் உள்ளடக்கியது தானே. உங்களால் ஒரு சிலருக்காவது, எங்கட போராட்டத்தின் நியாயங்களை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை புரிந்து கொள்ள வைத்தால் அதுவே பெரிய வெற்றி.
இன்றைக்கு உலகம் முழுவதுற்கும் தமிழ் ஈழம் என்ற ஒரு நிலப்பரப்பு ஈழத்தில இருக்கு, அது தன்னாட்சி உரிமை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியாயம் விளங்க நாங்க சொல்லுறது தான் காரணம். ஒருத்தரும் தாங்களா எங்களை புரிந்து கொள்ள மாட்டினம். எங்களுக்கு உள்ளேயே சிலருக்கு, முன்னர் பலருக்கு இது புரியவில்லை. இப்ப என்னால முடிந்தது அந்த சிலரை திருத்துவது தான்.

எங்கையாவது ஒரு துரோகித் தமிழனை, எங்கட இந்த அபிலாசைகளை விட்டுடு நக்கித் தின்னும் சொற்ப ஆசைகளுக்காக அலைபவனை காண நேர்ந்தால், முதலில் அந்த துரோகியை மாற்றுங்கள், இல்லை அழியுங்கள். என்னால் எதுவுமே முடியாத நிலையில் இருந்து கொண்டு நான் இதை செய்யவில்லையா. கோவப் படமால் சக தமிழனுக்கு பிரச்சனையின் யதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனெனில் எல்லோருக்கும் சுயமா சிந்திக்க தெரியாது. தீர்க்கதரிசி ஒருவரின் கொள்கையை பிரதிபலிப்பதன் நயம் புரியவைத்தால் தான் புரியும். இந்த 30 வருசமா எங்கட தலைவரின் வழிநடத்தல் செய்த மற்றம் தான் உலகெங்கும் ஒலிக்கும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் என்ற முழக்கம். ஒரு சிலர் பகற்கனவு என்பது போல இன்னும் கதைக்க என்றே இருப்ப்பினம், அவர்களை முதல்ல கண்டு பிடிச்சு மாற்ற வேணும் இல்லை ஒழிக்க வேணும். இதையும் செய்து வென்றிட்டம் என்றால் எதிரி - துரோகியை விட - பலமிழந்தவன் தான்.

எதையும் வெளிப்படையா செய்ய முடியாத இடத்தில இருக்கிற நாங்கள் எப்ப பாதை திறப்பினம் என்று பார்க்கிற மக்களுக்கு, எங்கட உயிர் குடிக்கும் இராணுவ பேய்களின், தமிழ் துரோகியின் விமானத்தில் பறந்தாவது இலக்கை அடைய நினைக்கும் அப்பாவிகளை, நினைத்தால் நெஞ்சு பொறுக்காது தான்.
ஆனால் எங்களுக்கு எப்படி பட்ட தீர்வு வேணும் என்று வாக்கெடுப்பு நடந்தா இந்த அறிவிலிகளும், அற்ப ஆசை விரும்பிகளும் தான் முக்கிய பங்கு எடுப்பினம். அதல நாங்க இப்பவே அது பற்றி யோசிக்கோணும். இரகசிய இல்லை உள்விட்டுக்குள் பிரச்சாரம் ஒன்று கட்டாயம் தேவை.
உங்களால இயன்ற வரை இதையும் இப்பவே செய்தால், எப்பவும் நாங்கள் 99% ( எட்டப்பனை மாற்ற முடியாது தான், ஆனால் அவன் கூட்டாளிக்கு அவன் அற்ப தனத்தையும் எங்கள் தியகத்தனத்தியும் புரிய வைக்கலாம்) ஆதரவோடு ஜெயிச்சதா வரலாறு சொல்லும்.

Tuesday, March 31, 2009

தங்கம் பற்றி - தங்கை ( காதலி ) எழுதியது...

ம்ம்... எதோ வெளில சொல்லாமல் பொத்தி பொத்தி வைச்சிருந்த கடிதத்தை சும்மா போடலாம் போல இருந்துது... காரணம் கடிதத்தின் உரிமையாளரும் , சந்தர்ப்பங்களும் அழிந்துவிட்டன... மேலும் இந்த தங்கம் என்ற பெயர் எனக்கு தந்த உறவு - என் உயிர் நண்பி- உண்மையில அவள் என் உடன் பிறவா தங்கை- (பழைய நினைவுகளில் - விடலைப் பருவம்) இப்ப மறு பிறப்பு எடுக்க தயாராயிருப்பார்... எல்லாம் யோசிச்சு தான் தங்கத்தை இப்ப என் நண்பன் சொல்லுமாப் போல கறுப்பு தங்கம் - பிளாட்டினம் - என்று மாத்தினான்... என்னை பற்றி ஒரு சின்ன நினைவூட்டல் உங்களுக்கு... இது எங்க எப்ப என்றெல்லாம் சொல்ல விரும்பல... ஆனால் அன்பின் ஆழத்தை உணர்த்தும் திருமுகம் என்றதால இங்க தாறன்...

என் உயிர் எனக்கு கடைசியாக எழுதியது முதல் பகுதி மட்டும் முகுதி தணிக்கை..
//
என் செல்லம்! தயவு செய்து முழுக்க வாசிக்கவும். இப்படி தான் தினமும் notes எழுத என்று எடுக்கிற papers எல்லாம் எதாவது உங்களைப் பற்றியே எழுதீட்டு, பிறகு யாரவது பார்த்திடுவினம் என்று கசக்கி எறியிரன். உங்களுக்கு சொல்ல நினைக்கிற கதை என்னோட நாளாந்த வாழ்க்கை, உங்களிடம் பகிர விரும்பிற என்னோட கடந்த காலம், தினம் தினம் நான் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், சந்தோசங்கள், கவலைகள், என்ன செய்தன், என்ன சாப்பிட்டன் என்றது முதல் எல்லாமே... எனக்கு நீங்கள் தான்....
நான் கோவத்தில உங்களோட கதைக்கிறதை எல்லாம் தயவு செய்து மனதில வைச்சுகொள்ள வேணாம். உங்களை விரும்பின மாதிரி எந்த ஒரு ஆணையும் நான் விரும்பினதில்லை- இனிமேல் என்னால விரும்பவும் முடியாது.
எத்தனையோ boysoda கதைச்சிருக்கன், கிட்ட இருந்து பழகியிருக்கன். அதில என்னை பிடிக்காமல் போனவர்கள் ஒன்று இரண்டு பேர் மட்டும் தான் . என்னை விரும்பியும் என் குணம் தெரிஞ்சு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று கேட்க நினைச்சும் கேக்காமலே இருக்கிற friends ஏயும் பார்த்திருக்கன். நான் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் என்றாவது நான் மாறலாம் என்று காத்திருக்கிற நண்பர்களும் எனக்கு தெரியும். அப்ப எல்லாம் என்னால அவங்களின் அன்பை புரிஞ்சு கொள்ள முடிஞ்சாலும் அதை ஏத்து கொள்ள முடிஞ்சதில்லை. எதோ பைத்தியக்காரங்கள் மாதிரி என்று நினைச்சிருக்கன்.
ஆனால் அந்த பாவமோ என்னமோ தெரியவில்லை, இப்ப நான் ஒரு பைத்தியம் மாதிரி தான் இருக்கன் - அதே காதலுக்காக. என்னால இப்ப எல்லாம் எதுவுமே சொந்தமா யோசிக்கவோ, செய்யவோ முடியிறதில்லை. முந்தி மாதிரி என்றால் நான் உண்மையில எத்தனையோ செய்தது முடிச்சிருப்பன். ஒரு நாலு நாளில செய்யக் கூடிய வேலையை இப்ப 2 மாதமா இழித்தடிச்சு கொண்டிருக்கன். எனக்கு தெரியுது நான் எதோ பிழையான வழில போறான் என்று. ஆனால் என்னால வேற வழில போக முடியல- போகவும் முடியாது.
ஆனாலும் நான் எல்லாத்தையும் நல்ல படிய செய்ய வேணும் என்று விரும்புறன். என் தங்கம் மட்டும் என்னோட இருந்தால் எனக்கு போதும்- என்னால எல்லாமே முடியும். முந்தி எல்லாம் நான் தனியவே எல்லாத்தையும் 100% செய்வன் என்ற நம்பிக்கை இருந்தது.
ஏனோ தெரியல எனக்கும் ஒரு வாழ்க்கை துணை தேவை என்று நான் நினைத்த நேரம் ஒரே ஒரு நிமிஷம் தான். எனக்காக உயிரையே தரக்கூடிய நண்பன் என்னை தன் உயிருக்கு நிகராக விரும்புறார் என்று தெரிஞ்ச பிறகும், அவரை விட ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்தால் அது என் மடைத்தனம். "உங்களை கலியாணம் கட்டி உங்களோட காலம் பூராவும் வாழ விரும்புறன்" என்று சொல்லிய அந்த கணமே, நான் என் எல்லா விசயத்திலும் என்னோடு பங்கெடுக்க இப்படி ஒருவரை என்னால தெரியவே முடியாது என்று எவ்வளவு சந்தோசப் பட்டன்.
இப்பவும், எப்பவும் என் தெரிவை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறன், ஏனென்றால் என்னை விரும்பின எல்லாரும் எனக்காக எதையும் செய்ய தயாரா இருந்தவை என்பது உண்மை என்றாலும், என் தங்கம் எனக்காக உயிரையே குடுக்க தயாரா இருந்தவர். கூடவே பிறக்காத இடையில ஓட்டிடு பிரிஞ்சு போற ஒரு தங்கைச்சிகாக இப்படி இருக்கிற அண்ணனை யாரவது இழப்பாங்களா? பிரிவே இல்லாத உறவா அவர் கூடவே என் கடைசி கணம் வரை இருக்கோனும் என்று நான் எடுத்த முடிவு என்றைக்கும் பிழையானதாக இருக்க மாட்டுது.
ஆனாலும் ஏன் என் அண்ணா இப்ப எல்லாம் என்னை வெறுப்ப பார்க்கிறார் போல எனக்கு தோன்றுது? நான் அவரிட்ட எதிர் பார்க்கிற, அவர் தன் தங்கைக்கு காட்டிய அந்த பரிசுத்தமான அன்பு இப்ப மனைவியா, அவர் காதலியா எனக்கு கிடைக்கவில்லை என்று என் மனம் எதோ விசர் மாதிரி யோசிக்குது. எனக்கே புரியவில்லை. ஆனாலும் என் தங்கம் எனக்கு மட்டும் தான் என்றைக்கும். எப்பாவது எனக்கு கிடைக்க மாட்டார் என்று தெரியுதோ, அதுக்கு பிறகு நான் உயிர் வாழமாட்டன். அம்மா, அப்பா, அக்கா, தம்பி அதோட ஈழம், என் மக்கள், என் உறவுகள் என்று உணர்ச்சி பூர்வமா நான் கதைக்கும் போதெல்லாம், என் நண்பர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லை- நீ மாறிடுவாய்- என்று பல முறை சொல்லும் போதெல்லாம், எப்படி என்னால மாற முடியும் என்று வியந்திருக்கன். இப்ப எல்லாம் என் ஒவ்வொரு அணுவும் என் தங்கம் என்று மட்டும் சொல்லி துடிக்கிறதை பார்க்கிறான், அனுபவிக்கிறான். இப்ப நான் எப்படி இப்படி மாறினான் என்று வியக்கிறன்.
//

http://melbkamal.blogspot.com/2009/03/blog-post_22.html

எப்ப தான் நான் பொச்சு மட்டையாவன் என்று பாக்கிறீங்களோ.... டார்ச் மூடில இருக்கிறது பத்தாம் நூற்றாண்டுக்கு முதல்லே இந்து மா கடல்ல பறந்த எங்கட பாரம்பரியத்தின் சின்னம்...
டார்ச் மூடில இருக்கிறது = ஒரு இனம் = அவர் தம் பிரதிநிதிகள்.
அந்த சின்னத்தால் பிரதிநிதிகளையே விளிக்க பயன்படுத்திய அப்புக்குட்டி இன்னும் முழுமையான தெளிவில்லாமல், பாண்டியின் போக்கிலேயே இழுபடுை காணக் கூடியதா இருக்குது...
ஆனாலும் சின்னமும் அதன் பிரதிநிதிகளில் வழிகாட்டலும் இருக்கும் வரை என் இனமும் என் மொழியும் அழியப் போவதில்லை... ஒருவர் தான் தலைவராக மன்னனாக இருக்கலாம்... அனாலும் மந்திரிகளும் இளவரசர்களும் மீண்டும் மீண்டும் சிறந்த மன்னனை தெரிவு செய்யும் போது மக்களின் வாழ்க்கை வசந்தமாக இருக்க கூடிய கட்டமைப்பு அழிந்து போய்விடும் என்று கனவு காணுபவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது.....
வெறும் ஒற்றை பற்றியில் இயங்கும் கட்டமைப்பு போல் கதைக்கும் பாண்டி எந்த ஒரு இலத்திரனியல் சாதனத்தையும் வடிவமைக்கும் போது எந்த வகையில் மூல வழங்கியில் இருந்து மின்சார இணைப்பு குடுப்பது என்பதை திட்டமிடவேண்டும்.. வெவ்வேறு மூல வழங்கிகளை பாவித்தால் அழுத்த சீராக்கம், சீரற்ற ஆடலோட்ட, நேரோட்ட நிலைமைகள் வரலாம்... அது தான் அவர் மூல வழங்கியை மாற்றீடு செய்வம் என்கிறார்... அதுக்கு முதல்ல யோசிக்கோணும் இந்த மூல வழங்கி பற்றியும் அதன் விரிவாக்கம் பற்றியும்... அதன் கட்டமைப்பிலேயே மாற்றீடு செய்வது எப்படி என்று திட்டமும் இருக்கு... நாயை குளிப்பாட்டி நாடு வீட்டில வைக்கலாமோ? பொறுத்திருங்கள்... ஆக்கப் பொறுத்திட்டு ஆறப் பொறுக்காமல் எப்படி ஹெமிஸ்ரி படிச்சீங்க???

ஆசுப்பத்திரி கட்டுறது என்று ஒவ்வொரு ஒவ்வொரு கல்லா பாத்து வைகிறாங்கள என்று பாக்க போக சொன்னாங்கள்.. ஒரு மாதத்தில திரும்பி வாறதுக்கிதேல்லை என்னை அடிச்சு பொச்சாக்கி ஆசுப்பத்திரிலையே போட்டுட்டாங்கள்...
பட்டம் பறந்த வானில் இலகு ரக வாகனம் பறந்தே கிலி மாறேல்லை... ( மீண்டும் இராவணனின் புஷ்பகம் அகள்வராச்சியிலா கண்டு பிடிச்சம்... எல்லாம் பொறியியல் மூளையும் தீர்க்கதரிசனமும் தான்...) . காலம் மாறும் போது பெறுமதியும் மாறி கண்ணோட்டமும் மாறி... தங்கம் ப்ளடினுமா மாறிச்சு... உங்கட கதை கேட்டு மன அழுத்ததில அணுக்கள் எல்லாம் நெருக்கமா மாறி கொதித்து ஆறியபோது தான் இந்த இரசாயன மாற்றம் நிகழ்ந்தது...

சத்தியமா உங்கள் ஒருவரையும் எனக்கு இதுவரை தெரியாது... இனிமேலும் தெரிய விரும்பலை... காலம் வரும் போது அறிமுகமாவோம் தமிழனாய்... சகோதரனாய்...

அப்பு குட்டி சுயமா யோசியுங்கோ.... குரைக்கிற நாய் கடிக்காது... செய்யிறதெல்லாம் சொல்லேலாது...செய்யப் போவன் என்றும் சொல்லேலாது செய்து காட்டும் மட்டும்.. but சிலவேளை சிலதை சொல்ல வேண்டியிருக்கும் ஏனென்றால் மற்றவர்களுக்கு சொன்னா தான் விளங்கும்.. எல்லாராலும் மௌனத்தை புரிய முடியாது.... அது தான் நான் எல்லாம் ஆய்வு செய்யிறதில்லை... யாரவது செய்தா திருத்தி சொல்லுறன்... ஏனென்றால் சாதாரணமாக யோசிக்கதெரிஞ்ச்சவையை அவை பிழையா வழி நடத்தி.. அவர் தம் மனதை மாற்றி விடக்கூடாது என்று... அது தான் சிலவேளை புல்லட்டோடும் உணர்ச்சிவசப் பட்டுடுவன்... உண்மையையும் தீர்க்கதரிசனத்தையும் நியாயப் படுத்த நான் போதிய அறிவும் ஆதாரமும் தெரிஞ்சு வைச்சிருக்கன்.... அது தான் யாரவது பிழையான வழி நடத்தலுக்கு போகும் போது உணர்ச்சி வசப் படுறன்.... உங்கட அந்த நேர்காணல் ரொம்பவே பிழையான முடிவு... தயவு செய்து உதவாட்டிலும் ... உபத்திரவம் செய்யாதீங்க... டோர்ச் மூடி என் தெரிவு இல்லை... என் இனத்தின் தெரிவு...
in the people only 40% may have the capability to think and decide.. other 40% should be directed correctly... 20 % is ok for anything.. I'm worrying only about the 2nd 40% and who is misleading them.. but the true is 2nd 40% is deciding the majority of an opinion..

Monday, March 30, 2009

ஏன் எனக்கு மட்டும் இந்த அவா?

எனக்கு வந்த ஒரு பின்னூட்டம்....
//
நீங்கள் இன்சினியரிங் படிச்சிட்டு தனிநாடு புளொக்ல கேக்கிறியள்.. வரலாறு தெரியாத நாயள்.. படிப்பை விட்டிட்டு நாடெண்டு போய் கைகால் சொத்தியாகி திரும்பி வந்து ாவழ வழிதெரியாம புளொக் எழுதுது..//

நான் என்ன நக்கித் தின்னவா பிறந்தேன் கடவுளே??? நாட்டை கட்டி எழுப்ப வேணும் என்று தான் தகைப்பு, இழுவை கணிச்சு சரிஞ்சு கொட்டுனாமல் கட்டுமானம் எப்படி உருவகிக்கிறது என்று பேப்பர் பேனை எடுத்து கணக்கு போட்டு பட்டம் வங்கி இருக்கன்... பேனைக்கு இருக்கிற வலிமை காணாது என்று தானே ஆயுதத்தை கையில எடுக்க வேணும் என்று அனுபவத்தில சொல்லுறன்... வாழ வழி தெரியாமல் தானே ப்ளோக்ல எழுதுறன்... நானும் ஆஸ்ற்றைலியாவிலயோ லண்டனிலையோ கனடாவிலையோ போய் நிண்டு துடிக்கேல்ல.. திரும்பி வர... இன்றேச்ட் என்னவா இருந்தாலும் என்னுடைய அறிமுகம் நான் இப்ப என்ன பண்ணுறன் என்று சொல்லுது தானே... என் இன்றேச்டை நேக்கி தான் என் பயணம் இருக்க வேணும் என்றில்லை... அனா அப்பிடி இருந்த வாழ்க்கை நன்னா இருக்குமுங்கோ... அது தான் சொன்னான்...

அப்பா நீங்க சொல்லுங்கோ... மானத்தோடையும், கை காலோடையும் எப்படி இருக்கிறது என்றதுக்கு நீங்களா நல்ல உதாரணம்?? என்ன தான் எனக்கு சொல்லுறீங்கள் புரியேல்லை ??

Friday, March 13, 2009

http://puligal.blogspot.com/2009_03_01_archive.html

http://puligal.blogspot.com/2009/03/defencelk-caught-with-more-fake.html#comment-form

Saturday, February 28, 2009

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e


/* ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.

புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

- இது தான் இன்றைய நிலை. */


உங்கள் தலைப்பை முதலில் மாற்றினால் அதுவே நீங்கள் வரலாற்றுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.
எழுந்த மானமா இடைஇடையே வாசிக்கும் என் போன்றவர்கள் உங்கள் தலைப்பையும், நான் மேலே பிரித்தெடுத்த பந்தியையும் ஆழமா வாசித்து விட்டு இப்போது எந்த துணைக் குழுவோடு சேர்ந்துக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டோம்.
மக்களின் உயிர் தான் இப்ப காக்கப் படவேணும். அப்புறம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று மக்களை புலிகள் இல்லாமலே வாழ வைக்கலாம் என்ற எண்ணத்தை உங்கள் இந்த கட்டுரையின் சில பந்திகள் நீங்கள் விரும்பாமலேயே திணித்து விட்டன.

Monday, February 16, 2009

ஏன் எங்களால முடியாது?

http://www.puthinam.com/full.php?2b3TvPe0dxc2j0ecBH5m3b4TcE04d2c3l3cc2GpX3d43dSO3b036Qs3e

/ * போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம். *//* பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக */
ஏன் எல்லாரும் சேர்ந்து இலங்கைக்கு உதவுகினம்? இலங்கை அவர்களுக்கு என்ன செய்கிறது? தன் நாட்டில உள்ள சில வளங்களை அவர்களிடம் அடைமானம் வைக்கிறது... அவ்வளவு தான். அதே வளம் தமிழீழத்தில் இருந்தால் நாங்கள் அடைமானம் வைக்க மாட்டோம் என்பதால் தானே? ஏன் நாங்களும் இலங்கை செய்யுமாப் போலவே சில விட்டு கொடுப்புக்களை செய்யக் கூடாது? நாங்கள் பெரிய பெரிய வல்லரசுகளை எதிர்க்கிற அளவுக்கு ஒன்றும் பெரிய நிலப் பரப்போ ஆட்பலமோ அற்றவர்கள்.... சில வேளை இல்லை நிச்சயமாக நாங்கள் மூளை வளத்தில் எதிர் காலத்தில் வல்லரசுகளை மிஞ்சலாம் என்ற பயமும் அவர்களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனாலும் /* தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள் */ என்று நீங்கள் சொன்ன மாதிரி கேட்கும் போது நாங்கள் இலங்கை உங்களுக்கு இப்போது செய்யும் அல்லது தரும் அதே உதவியையும் ஒத்தாசையையும் தருவோம் என உறுதியளித்து சில விட்டு கொடுப்புக்களை செய்தால் என்ன?மொத்தமா தனியரசு என்று போகும் போது தான் நாங்க அடங்க மறுப்போம், தங்களை மிஞ்சிவிடுவோம் என்று யோசித்து அவற்றை செய்ய மாட்டாம் என்று சொல்லும் இலங்கை அரசோடு அவை ஒத்து ஊதுகின்றன... ஏன் நாங்கள் சில புதிய கொள்கைகளையும், விட்டு கொடுப்புக்கையும் செய்யக் கூடாது? /* சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.*/ எதற்காக செய்யினம் என்று தெரிந்தால் நாங்கள் இரகசியமா அதே நாட்டோடு பேச்சு வார்த்தை நடத்தி அதையே செய்வம் என்று ஒத்து சொன்னால் என்ன?
/*சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை. */ உதாரணங்களை சொல்லி நாங்கள் உண்மையாய் இருப்பம் என்று சொன்னால் ஒரு சில நாடாவது எங்களை ஏற்றுக் கொள்ளும் தானே? இலங்கையால முடியுது , ஏன் எங்களால முடியாது? எங்களை தடை செய்ய சொல்லி பெரும் பீரங்கியா இருந்த கதிர்காமர் ஒரு தமிழர் தானே? அவரின் அதே மூளை எங்களுக்கும் இருக்கு தானே? எல்லாம் சுயநலம் இல்லாமல் உதவுவினம் என்று எதிர் பார்க்க கூடாது இல்லையா?
எனக்கு வரலாறும் பெரிசா தெரியாது... உங்களை மாதிரி ஒரு அனுபவவும் இல்லை.. சும்மா யோசிக்க தோன்றிச்சு... யாரு தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் சும்மா நண்பனா இருப்பன் என்றதுக்காக உதவுவினம்?எங்கட தலை நகர்- திருமலை துறைமுகத்தை எங்கட கையில வைச்சு இருக்கோனும் என்று நினைச்சு கடைசியா இலங்கை அதை யாருக்கோ கொடுக்குது? ஏன் நாங்களே அதை இன்னும் கொஞ்சம் மலிவா நாணயமா குத்தகைக்கு தருவம், எங்களுக்கு நீங்க தனி நாடு அங்கீகாரம் தந்தால். அதோட இன்னும் சில திட்டங்கள் எங்கட நாட்டில இருந்து செய்யக் கூடியதாக பிளான் பண்ணி குடுப்பம். சர்வதேசத்தை brain wash பண்ணுவம்.கொஞ்சம் develope ஆனா பிறகு, குத்தகையை வேற party க்கு குடுப்பம்... நாங்களே முழுசையும் அனுபவிக்கோனும் அதுக்கு நீங்க உதவுங்க என்றால் யாரு தான் உதவுவினம்... இலங்கை சிங்களவரின் பச்சோந்தி தனத்தையும் எங்கள் இனத்தின் நாணயத்தையும் சொல்லி கொஞ்சம் விட்டு கொடுப்பம்... எனக்கு தெரியா இதெல்லாம் ஏற்கனவே செய்யினமோ இல்லையோ என்று... ஏன் போதறிவுக்கு எட்டின வரை தெரியேல்லை..நாங்கள் அமெரிக்காவுக்கு சொல்லுவம்... காணி உறுதி எங்களிட்ட தான் இருக்கு.. நீங்க இலங்கையிட்ட கேட்டு என்ன செய்ய விரும்புறீங்களோ அதையே உரிமை உள்ள எங்களிட்ட கேட்டு செய்யுங்கோ... ஒரு சில விசயங்களில் உங்களுக்கு நாங்கள் customer சில விசயங்களில நீங்க எங்களுக்கு customer. அவ்வளவு தான். அதுக்கு பிறகு எங்கட முதுகில என்ன சுமக்கிறது என்று நாங்க தான் முடிவு பண்ணுவம்... சில வேலை உங்களுக்கு தேவை என்றால் உங்களுக்காகவும் வேலை செய்வம்... அண்ணல் அடிமையா இல்லை.. நீங்கள் நியாயப் படி இப்ப எங்களுக்கு உதவுங்கோ... இலங்கையிட்ட எதிர் பார்கிறதை நாங்கள் உண்மையான நாணயத்தோட உரிமையோட தருவம் என்று சொன்னால் என்ன? ரொம்பத் தப்பா கதைக்கிறனோ தெரியேல்லை... என்ன செய்ய என்று நினைச்சிட்டால் வழியை இலகுவா கண்டுபிடிச்சிடலாம்...பாதைகள் மாறலாம், இலக்கு மாறாது... சில வளைவுகள் .. சில விட்டு கொடுப்புக்கள்... முழுவதையும் இழக்காமல்...வல்லவனுக்கு சொட்டு அடிபணியிறது... அவ்வளவு தான்.இவ்வண்ணம்,என் நாட்டுக்காக ஏதாவது செய்யத் துடிக்கும் ஒரு அறிவிலி...இது வரையும் எதுவும் செய்யாத ஒரு கோழை...எங்கள் ஈகப் பிரதிநிதிகளின் வரலாறு கூட இது வரை எனக்கு தெரிந்ததில்லை...இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னம் தான் ஏன் எங்கட பொடியலால எலேல்ல என்று சும்மா நினைச்சன்...எங்கயோ தப்பு பண்ணுறம்... ஏன் இலங்கை மட்டும் வெளி உலகுக்கு நட்பு, நாங்களும் தான் நட்பு என்று விட்டு கொடுத்தால் என்ன?சோழனின் விழ்ச்சிக்கு பின்னர் வந்த எங்கள் மன்னன் கட்டாயம் சோழனே மாதிரி இருக்காமல் இராய தந்திரங்களில இலங்கையின்ட முன்னால் வெளிவிவகார அமைச்சர் கதிகாமர் போல சிந்திச்சால் என்ன? (சோழனின் விழ்ச்சிக்கு உண்மைல என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. ஆனால் கடாரம்- அது எந்த நாடு இந்தோனேசியா (?) வை கூட கைப் பற்றி வைச்சிருந்தவர் என்று கேள்விப் பட்டு இருக்கன்.. அது அந்த காலம்.. தென் இந்தியா கூட எங்கட நிலப்பரபோடோ ஒப்பிடும் போது ஒரு பால் வீதி மாதிரி.. நாங்கள் போய் எப்பிடி தனி கோளாய் இருக்க நினைக்கிறது? வேணாம் வேற்று கிரகத்தாரையும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு- தேவை என்றால் இலவசமாவே- அனுமதிப்பமே? )நன்றி.....பிழை பொறுத்தருள்க...

please read the first article and give me some feedbacks.... i wanna learn why are we like this in the world? where we did the mistake? why our country became as a bloody country?
please anybody help me???
is the God true? God is not in the earth? then why r we choosing Kings as God in the earth?

Friday, February 13, 2009

http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2328:2009-02-13-08-17-01&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54

காதலர் தின வாழ்த்துக்கள்...

மனிதக் காதலே செத்து போன இலங்கை தெரு நாட்டில காதலர் தின கொண்டாட்டத்துக்கு எங்க இழி தலைகள் வாழ்த்து சொன்ன எப்பிடியிருக்கும்?
ஒரு சின்ன கற்பனை.

நாட்டின் சாணியாதிபதி," எனதருமை தமிழ் சகோதரர்களே!!! எங்கள் நாட்டில நாங்கள் காதலர் தினம் கொண்டாடும் போது உங்களை மட்டும் வெளில கண்டபடி beachchu, கடே என்று திரிஞ்சால் கைது செய்வது உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான்., தமிழர்களாகிய உங்களின் மனதுக்கு ஏற்ற மாதிரி நீங்க உல்லாசமா வெளிக்கிட்டு போய் உங்கட பொன்னான கள்ளுத்(கல்லுத்) தோன்றி மண்ணுத் தோன்றா காலத்து கலாச்சாரத்தை மண்ணாக்கிடக் கூடாது என்று உங்கள் மேல் உள்ள அபரிமித அக்கறையால் தான். athaala நீங்க ரூம் போட்டே உங்க காதலரோடு நல்ல சந்தோசமா கொண்டாடுங்க...". மனதுக்குள் ரீங்காரம்.. ம்ம்ம் .. இப்படியே உங்க கலாச்சாரத்தை மண்ணாக்கிப் போட்டன் என்றால் அப்புறம் நீங்கள் என்ன அடையாளம் வைச்சிருக்கிறீங்கள் நீங்கள் தமிழன் என்று சொல்ல. கிக்கீகீ..கிக்கீ..

மாதிப்புக்குரிய டார்க்கிளாஸ் தாடியை தடவிக் கொண்டே "யாரவது இந்த புனித தினத்தை கொண்டாடாமல் விட்டால் அவர்கள் வி.பு ஆதரவு என்று சொல்லி இனம் தெரியாதவையாள மடக்கி பிடிக்கப் பட்டு திறந்த வெளியரங்கில் ஆர்ப்பாட்டமா இந்த தினத்தை கொண்டாட நிர்ப்பந்திக்கப் படுவினம்... எதுக்கும் வி.பு ஏதாவது குளறுபடி செய்ய நினைக்கும்.. மிகவும் கவனமா பக்தி சிரத்தையோடு நேரத்தை schdule பண்ணி எல்லா உறவுகளையும் கவனமா பாதுகாத்து கொள்ளுங்கோ.. ஒருத்தி இல்லை என்றால் மற்றாள் உதவுவினம் அவசரத் தேவைக்கு.. அரசியலில் கூட நான் இதைத் தான் simple டேக்கினிக்கா பயன்படுத்துறன்.."

அப்புறமா எங்கட ஆனந்தமான தலை சொல்லிச்சு "எல்லாத் தினங்களும் இல்லை இனங்களும் ஒரே மாதிரி தான் இந்த நாளைக் கொண்டாட வேணும் அப்ப தான் சமத்துவம் மலரும், அப்புறமா நான் சமஸ்டி தேவை இல்லை என்று சொன்னதுக்கு அர்த்தம் இருக்கும்.. வாழ்க தமிழ்... வாழ்க சமத்துவம்(கவனிக்கவும் சமஸ்டி என்று கவிழ கூட சொல்ல மாட்டன்)"....நான் ஒன்றும் எங்கள் ஆனந்தசங்கரி பற்றி சொல்லவில்லை.. அவர் ஒரு மூத்த தலைவர் பாருங்கோ....


வாழ்த்து தெரிவிக்க விரும்புறவை எல்லாம் வாழ்த்து தெரிவியுங்கப்பா...... எனக்கு நீங்க என்ன கமெண்டு பண்ணினாலும் பிரச்சனை இல்லை... ஏன் என்றால் தமிழக பெரும் முதலை இல்லை முதல்வர் மாதிரி எல்லாம் ரொம்ப சைலண்டா இருந்திடுவன் நீங்க எனக்கே ஆப்பு வைச்சீங்கள் என்றால்...

Tuesday, February 3, 2009

சுதந்திரம் எங்கே?

Independence is the self-government of a nation, country, or state by its residents and population, or some portion thereof, generally exercising sovereignty.

Does Sri Lanka achieved this?

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ஒரு சுதந்திர நாடா? விடை தேடிப் புறப்பட்ட பொது தான் வலிகள் தெரிந்தன... நாங்கள் கடந்து வந்த பாதைகளில் இருந்த கல்லு முள்ளுகளுடன் இன்று ஒரு பெரும் பாறாங்கல்லே - அயல் நாடு அன்பு கரம், ஆதரவுக் கரம் தரும் என்று நாம் நம்பி இருந்த பழமை வாய்ந்த தேசம் - தடையாய் வந்து நசுக்குகிறது இலங்கையின் சிறுபான்மையும், ஆதி குடிகளுமான என் மானத் தமிழினத்தை.

என்னவென்று சொல்லி புரிய வைப்பது, உண்மைத் தாற்பரியம் விளங்கியும் வறட்டு கொள்கைகளுக்காய் எங்களை விழுங்கி கொண்டிருக்கும் இந்த வட நாட்டவரையும் இத்தாலிக்காரியையும்...

காலம் பதில் தருமா இல்லை எங்கள் பெரும் தன்மையை தூக்கி எறிந்து விட்டு நாங்களே பதிலை தேடிக் கொள்வதா??