Saturday, February 28, 2009

விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி?

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e

http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e


/* ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.

புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

- இது தான் இன்றைய நிலை. */


உங்கள் தலைப்பை முதலில் மாற்றினால் அதுவே நீங்கள் வரலாற்றுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி.
எழுந்த மானமா இடைஇடையே வாசிக்கும் என் போன்றவர்கள் உங்கள் தலைப்பையும், நான் மேலே பிரித்தெடுத்த பந்தியையும் ஆழமா வாசித்து விட்டு இப்போது எந்த துணைக் குழுவோடு சேர்ந்துக்கலாம் என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டோம்.
மக்களின் உயிர் தான் இப்ப காக்கப் படவேணும். அப்புறம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று மக்களை புலிகள் இல்லாமலே வாழ வைக்கலாம் என்ற எண்ணத்தை உங்கள் இந்த கட்டுரையின் சில பந்திகள் நீங்கள் விரும்பாமலேயே திணித்து விட்டன.

3 comments:

  1. பெரியவை ஒவ்வொரு வரி எழுதும் போதும் யோசிச்சு எழுதோணும். அடுத்தவரி வாசிக்காமலே என்னை போல் அறிவிலி மேல் சொன்னவாறு முடிவேடுத்திடும்.

    எனக்கு வரலாறு தெரியா,,, அனால் ஒன்று மட்டும் தெரியும்... தலைவர் ஒரு தீர்க்கதரிசி... அவரால் மட்டும் தான் எங்களுக்கு ஒரு நாடு தரமுடியும்... நாடு இல்லாமல் ஒரு வாழ்க்கை என்றால் அது நாய் வாழ்க்கை தான். அதுக்கு நான் என்ன பண்ணுறன் என்று கேக்காதீங்க... அதுவே என் ப்ரோபைல என்னை பத்தி இன்றடுசே பண்ணும் போது சொல்லிட்டன்.

    ReplyDelete
  2. யோ இது நல்லாத் தானே இருக்கு???

    ReplyDelete
  3. அடுத்தவரி வாசிக்காமலே என்னை போல் அறிவிலி முடிவெடுத்திடும்....
    கீழ் வருவதும் அதே கட்டுரையில இருந்தது தான்

    "ஆனால், 'பயங்கரவாத' இயக்கம் ஒன்றிற்கு எதிரான போரை நிறுத்தும் படி யாருமே சிறிலங்காவுக்குச் சொல்ல முடியாது.

    அப்படியானால் போரை நிறுத்தி, வன்னி மக்களைக் காக்க என்ன தான் வழி...?

    அதற்கு இருக்கும் ஒரே வழி - ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்.

    புலிகள் சரணடைந்தவுடன் - போரும் நிற்கும், வன்னி மக்களும் காப்பாற்றப்படுவார்கள், "நடக்கின்றது!" என்று நாம் கதறும் "இனப்படுகொலை"யும் நடக்காது.

    - இது தான் இன்றைய நிலை."

    மிச்சத்தை வாசிச்சு அவர் முடிவா என்ன சொல்லுர்ரர் என்று பாக்காமலே நான் புலியை ஆயுதத்தை போட சொல்லுறது தான் முடிவென்று எடுத்திட்டன்... யோசிச்சி எழுதோணும்...
    எழுந்த மானமா வாசிக்கிற நான் தலைப்போடு ( கட்டுரைத்இ தலைப்பு விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி? - http://www.puthinam.com/full.php?2bZSmLe0dEk1s0ecTG8H4b4ScGC4d2i2e2cc2Iq03d435TS3b021Lr3e ) ஒத்து போகக் கூடின மாதிரி இந்த பந்தியக் கண்டதும் கட்டுரையின் முழு பொருளையும் மேல் சொன்ன பந்தியா எடுத்திட்டன்....

    ReplyDelete