http://www.puthinam.com/full.php?2b3TvPe0dxc2j0ecBH5m3b4TcE04d2c3l3cc2GpX3d43dSO3b036Qs3e
/ * போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டு, போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம். *//* பாகிஸ்தானோடு பரவசப்பட்டு, சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்கு, தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக */
ஏன் எல்லாரும் சேர்ந்து இலங்கைக்கு உதவுகினம்? இலங்கை அவர்களுக்கு என்ன செய்கிறது? தன் நாட்டில உள்ள சில வளங்களை அவர்களிடம் அடைமானம் வைக்கிறது... அவ்வளவு தான். அதே வளம் தமிழீழத்தில் இருந்தால் நாங்கள் அடைமானம் வைக்க மாட்டோம் என்பதால் தானே? ஏன் நாங்களும் இலங்கை செய்யுமாப் போலவே சில விட்டு கொடுப்புக்களை செய்யக் கூடாது? நாங்கள் பெரிய பெரிய வல்லரசுகளை எதிர்க்கிற அளவுக்கு ஒன்றும் பெரிய நிலப் பரப்போ ஆட்பலமோ அற்றவர்கள்.... சில வேளை இல்லை நிச்சயமாக நாங்கள் மூளை வளத்தில் எதிர் காலத்தில் வல்லரசுகளை மிஞ்சலாம் என்ற பயமும் அவர்களுக்கு காரணமாயிருக்கலாம். ஆனாலும் /* தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்து, தனியரசு உருவாக உதவுங்கள் */ என்று நீங்கள் சொன்ன மாதிரி கேட்கும் போது நாங்கள் இலங்கை உங்களுக்கு இப்போது செய்யும் அல்லது தரும் அதே உதவியையும் ஒத்தாசையையும் தருவோம் என உறுதியளித்து சில விட்டு கொடுப்புக்களை செய்தால் என்ன?மொத்தமா தனியரசு என்று போகும் போது தான் நாங்க அடங்க மறுப்போம், தங்களை மிஞ்சிவிடுவோம் என்று யோசித்து அவற்றை செய்ய மாட்டாம் என்று சொல்லும் இலங்கை அரசோடு அவை ஒத்து ஊதுகின்றன... ஏன் நாங்கள் சில புதிய கொள்கைகளையும், விட்டு கொடுப்புக்கையும் செய்யக் கூடாது? /* சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:கருவிகள், உளவுத் தகவல்கள், ஆளணி, ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.*/ எதற்காக செய்யினம் என்று தெரிந்தால் நாங்கள் இரகசியமா அதே நாட்டோடு பேச்சு வார்த்தை நடத்தி அதையே செய்வம் என்று ஒத்து சொன்னால் என்ன?
/*சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை. */ உதாரணங்களை சொல்லி நாங்கள் உண்மையாய் இருப்பம் என்று சொன்னால் ஒரு சில நாடாவது எங்களை ஏற்றுக் கொள்ளும் தானே? இலங்கையால முடியுது , ஏன் எங்களால முடியாது? எங்களை தடை செய்ய சொல்லி பெரும் பீரங்கியா இருந்த கதிர்காமர் ஒரு தமிழர் தானே? அவரின் அதே மூளை எங்களுக்கும் இருக்கு தானே? எல்லாம் சுயநலம் இல்லாமல் உதவுவினம் என்று எதிர் பார்க்க கூடாது இல்லையா?
எனக்கு வரலாறும் பெரிசா தெரியாது... உங்களை மாதிரி ஒரு அனுபவவும் இல்லை.. சும்மா யோசிக்க தோன்றிச்சு... யாரு தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் சும்மா நண்பனா இருப்பன் என்றதுக்காக உதவுவினம்?எங்கட தலை நகர்- திருமலை துறைமுகத்தை எங்கட கையில வைச்சு இருக்கோனும் என்று நினைச்சு கடைசியா இலங்கை அதை யாருக்கோ கொடுக்குது? ஏன் நாங்களே அதை இன்னும் கொஞ்சம் மலிவா நாணயமா குத்தகைக்கு தருவம், எங்களுக்கு நீங்க தனி நாடு அங்கீகாரம் தந்தால். அதோட இன்னும் சில திட்டங்கள் எங்கட நாட்டில இருந்து செய்யக் கூடியதாக பிளான் பண்ணி குடுப்பம். சர்வதேசத்தை brain wash பண்ணுவம்.கொஞ்சம் develope ஆனா பிறகு, குத்தகையை வேற party க்கு குடுப்பம்... நாங்களே முழுசையும் அனுபவிக்கோனும் அதுக்கு நீங்க உதவுங்க என்றால் யாரு தான் உதவுவினம்... இலங்கை சிங்களவரின் பச்சோந்தி தனத்தையும் எங்கள் இனத்தின் நாணயத்தையும் சொல்லி கொஞ்சம் விட்டு கொடுப்பம்... எனக்கு தெரியா இதெல்லாம் ஏற்கனவே செய்யினமோ இல்லையோ என்று... ஏன் போதறிவுக்கு எட்டின வரை தெரியேல்லை..நாங்கள் அமெரிக்காவுக்கு சொல்லுவம்... காணி உறுதி எங்களிட்ட தான் இருக்கு.. நீங்க இலங்கையிட்ட கேட்டு என்ன செய்ய விரும்புறீங்களோ அதையே உரிமை உள்ள எங்களிட்ட கேட்டு செய்யுங்கோ... ஒரு சில விசயங்களில் உங்களுக்கு நாங்கள் customer சில விசயங்களில நீங்க எங்களுக்கு customer. அவ்வளவு தான். அதுக்கு பிறகு எங்கட முதுகில என்ன சுமக்கிறது என்று நாங்க தான் முடிவு பண்ணுவம்... சில வேலை உங்களுக்கு தேவை என்றால் உங்களுக்காகவும் வேலை செய்வம்... அண்ணல் அடிமையா இல்லை.. நீங்கள் நியாயப் படி இப்ப எங்களுக்கு உதவுங்கோ... இலங்கையிட்ட எதிர் பார்கிறதை நாங்கள் உண்மையான நாணயத்தோட உரிமையோட தருவம் என்று சொன்னால் என்ன? ரொம்பத் தப்பா கதைக்கிறனோ தெரியேல்லை... என்ன செய்ய என்று நினைச்சிட்டால் வழியை இலகுவா கண்டுபிடிச்சிடலாம்...பாதைகள் மாறலாம், இலக்கு மாறாது... சில வளைவுகள் .. சில விட்டு கொடுப்புக்கள்... முழுவதையும் இழக்காமல்...வல்லவனுக்கு சொட்டு அடிபணியிறது... அவ்வளவு தான்.இவ்வண்ணம்,என் நாட்டுக்காக ஏதாவது செய்யத் துடிக்கும் ஒரு அறிவிலி...இது வரையும் எதுவும் செய்யாத ஒரு கோழை...எங்கள் ஈகப் பிரதிநிதிகளின் வரலாறு கூட இது வரை எனக்கு தெரிந்ததில்லை...இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னம் தான் ஏன் எங்கட பொடியலால எலேல்ல என்று சும்மா நினைச்சன்...எங்கயோ தப்பு பண்ணுறம்... ஏன் இலங்கை மட்டும் வெளி உலகுக்கு நட்பு, நாங்களும் தான் நட்பு என்று விட்டு கொடுத்தால் என்ன?சோழனின் விழ்ச்சிக்கு பின்னர் வந்த எங்கள் மன்னன் கட்டாயம் சோழனே மாதிரி இருக்காமல் இராய தந்திரங்களில இலங்கையின்ட முன்னால் வெளிவிவகார அமைச்சர் கதிகாமர் போல சிந்திச்சால் என்ன? (சோழனின் விழ்ச்சிக்கு உண்மைல என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. ஆனால் கடாரம்- அது எந்த நாடு இந்தோனேசியா (?) வை கூட கைப் பற்றி வைச்சிருந்தவர் என்று கேள்விப் பட்டு இருக்கன்.. அது அந்த காலம்.. தென் இந்தியா கூட எங்கட நிலப்பரபோடோ ஒப்பிடும் போது ஒரு பால் வீதி மாதிரி.. நாங்கள் போய் எப்பிடி தனி கோளாய் இருக்க நினைக்கிறது? வேணாம் வேற்று கிரகத்தாரையும் நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு- தேவை என்றால் இலவசமாவே- அனுமதிப்பமே? )நன்றி.....பிழை பொறுத்தருள்க...
please read the first article and give me some feedbacks.... i wanna learn why are we like this in the world? where we did the mistake? why our country became as a bloody country?
please anybody help me???
is the God true? God is not in the earth? then why r we choosing Kings as God in the earth?
Monday, February 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நீங்கள் யோசிப்பதில் பிழை ஏதும் இல்லை... அதை பெரும் பெரும் திட்டமிடல் செய்தவர்களெல்லாம் சிந்திக்காமலிருப்பார்களென்றில்லை..
ReplyDeleteஎங்கேயோ ஏதோ பிசகி விட்டிருக்க வேண்டும்.. அதுதான் இத்தனை சடுதியான வீழ்ச்சி... தென்னாசியாவின் இஸ்ரேலாகஒரு சந்தர்ப்த்தை
அமெரிக்க வல்லரசு வழங்குமாி யின் அதை நழுவ விட எவராவது யோசிப்பார்களா? இவற்றின் பின்னால் நுண்ணரசியல் ஏதாவது இருக்கும்..
இப்போதிருக்கும் நிலையில் எதையும் செய்யமுடியாது...கதம்கதம்..
ராஜீவ் கா ந்தி சம்பவம் போல்இம்முறையும் உணர்ச்சி க்கு எங்காவது அரசியல் அடிபணிந்திருப்பின் அதை திருத்த இம்முறை உலகம் இடம் கொடாது... சில தலைமைகளை ஏற்ற தமிழர்களின் கனவுகள் கிழிந்து ஊனமாக வேண்டியதுதான்... அதுதான் இப்ுபோது நடப்பதாக எனக்குத்தோன்றுகிறது..
எல்லாம் கைநழுவிப்போய்விட்டது... இனிமேல் சூரிய நமஸ்காரம் செய்து பிரயோசனமில்லை..இலங்கைத்தமிழர்களின் கடைசி பரம்பரையினர் என்ற பெருமை எங்களுக்கோ அல்லது எங்கள் குழந்தைக ளுக் கோ கிடைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவேனும் சந்தேகமில்லை...
கவலைப்படுவதை விடுத்து இருக்கிற காலத்தை அமைதியாக கழிக்க முயற்சிப்போம்...
கடவுளாவது மண்ணாவது........
/* இப்போதிருக்கும் நிலையில் எதையும் செய்யமுடியாது...கதம்கதம்..
ReplyDeleteராஜீவ் கா ந்தி சம்பவம் போல்இம்முறையும் உணர்ச்சி க்கு எங்காவது அரசியல் அடிபணிந்திருப்பின் அதை திருத்த இம்முறை உலகம் இடம் கொடாது... சில தலைமைகளை ஏற்ற தமிழர்களின் கனவுகள் கிழிந்து ஊனமாக வேண்டியதுதான்... அதுதான் இப்ுபோது நடப்பதாக எனக்குத்தோன்றுகிறது..//
முண்டு கொடுத்து நிமிர்த்த என்ன செய்தீங்கள்? அதை விட்டுட்டு எல்லாம் அவர்களின் தலையில் பழி சுமத்துறீங்கள்.... இன்னும் காலம் போகவில்லை. நீங்க வேற தலை பார்க்க? காலம் போகவும் மாட்டாது... என்ன என்றாலும் எங்கள் இந்த மாவீரர் தலைமையில் தான் கிடைக்கும் என்றது வெளிப்படை.
இப்பவே உங்களை- ஒரு துரோகியை இனங்கான உங்கள் எழுத்துக்கள் உதவுது.
இயன்றவரை கை தாருங்கள்.....
ஒரு எள்ளவது எடுத்து கொடுத்தீங்களா வேள்விக்கு? சும்மா வேள்வி நிறைவேறட்டும் என்று விடுப்பு பாத்திட்டு.. இப்ப வேள்வி பற்றி கதைக்கவே உண்மைல எங்களுக்கு அருகதை இல்லை. எங்க இருந்தனீங்கள் இவ்வளவு நாளும்? அப்பிடியே இப்பவும் இருங்க. இல்லாடி எப்படி வேள்விக்கு உதவுறது என்று யோசிச்சு எழுதுங்கோ... பிரயோசனம்.....