Tuesday, March 31, 2009

தங்கம் பற்றி - தங்கை ( காதலி ) எழுதியது...

ம்ம்... எதோ வெளில சொல்லாமல் பொத்தி பொத்தி வைச்சிருந்த கடிதத்தை சும்மா போடலாம் போல இருந்துது... காரணம் கடிதத்தின் உரிமையாளரும் , சந்தர்ப்பங்களும் அழிந்துவிட்டன... மேலும் இந்த தங்கம் என்ற பெயர் எனக்கு தந்த உறவு - என் உயிர் நண்பி- உண்மையில அவள் என் உடன் பிறவா தங்கை- (பழைய நினைவுகளில் - விடலைப் பருவம்) இப்ப மறு பிறப்பு எடுக்க தயாராயிருப்பார்... எல்லாம் யோசிச்சு தான் தங்கத்தை இப்ப என் நண்பன் சொல்லுமாப் போல கறுப்பு தங்கம் - பிளாட்டினம் - என்று மாத்தினான்... என்னை பற்றி ஒரு சின்ன நினைவூட்டல் உங்களுக்கு... இது எங்க எப்ப என்றெல்லாம் சொல்ல விரும்பல... ஆனால் அன்பின் ஆழத்தை உணர்த்தும் திருமுகம் என்றதால இங்க தாறன்...

என் உயிர் எனக்கு கடைசியாக எழுதியது முதல் பகுதி மட்டும் முகுதி தணிக்கை..
//
என் செல்லம்! தயவு செய்து முழுக்க வாசிக்கவும். இப்படி தான் தினமும் notes எழுத என்று எடுக்கிற papers எல்லாம் எதாவது உங்களைப் பற்றியே எழுதீட்டு, பிறகு யாரவது பார்த்திடுவினம் என்று கசக்கி எறியிரன். உங்களுக்கு சொல்ல நினைக்கிற கதை என்னோட நாளாந்த வாழ்க்கை, உங்களிடம் பகிர விரும்பிற என்னோட கடந்த காலம், தினம் தினம் நான் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், சந்தோசங்கள், கவலைகள், என்ன செய்தன், என்ன சாப்பிட்டன் என்றது முதல் எல்லாமே... எனக்கு நீங்கள் தான்....
நான் கோவத்தில உங்களோட கதைக்கிறதை எல்லாம் தயவு செய்து மனதில வைச்சுகொள்ள வேணாம். உங்களை விரும்பின மாதிரி எந்த ஒரு ஆணையும் நான் விரும்பினதில்லை- இனிமேல் என்னால விரும்பவும் முடியாது.
எத்தனையோ boysoda கதைச்சிருக்கன், கிட்ட இருந்து பழகியிருக்கன். அதில என்னை பிடிக்காமல் போனவர்கள் ஒன்று இரண்டு பேர் மட்டும் தான் . என்னை விரும்பியும் என் குணம் தெரிஞ்சு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று கேட்க நினைச்சும் கேக்காமலே இருக்கிற friends ஏயும் பார்த்திருக்கன். நான் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் என்றாவது நான் மாறலாம் என்று காத்திருக்கிற நண்பர்களும் எனக்கு தெரியும். அப்ப எல்லாம் என்னால அவங்களின் அன்பை புரிஞ்சு கொள்ள முடிஞ்சாலும் அதை ஏத்து கொள்ள முடிஞ்சதில்லை. எதோ பைத்தியக்காரங்கள் மாதிரி என்று நினைச்சிருக்கன்.
ஆனால் அந்த பாவமோ என்னமோ தெரியவில்லை, இப்ப நான் ஒரு பைத்தியம் மாதிரி தான் இருக்கன் - அதே காதலுக்காக. என்னால இப்ப எல்லாம் எதுவுமே சொந்தமா யோசிக்கவோ, செய்யவோ முடியிறதில்லை. முந்தி மாதிரி என்றால் நான் உண்மையில எத்தனையோ செய்தது முடிச்சிருப்பன். ஒரு நாலு நாளில செய்யக் கூடிய வேலையை இப்ப 2 மாதமா இழித்தடிச்சு கொண்டிருக்கன். எனக்கு தெரியுது நான் எதோ பிழையான வழில போறான் என்று. ஆனால் என்னால வேற வழில போக முடியல- போகவும் முடியாது.
ஆனாலும் நான் எல்லாத்தையும் நல்ல படிய செய்ய வேணும் என்று விரும்புறன். என் தங்கம் மட்டும் என்னோட இருந்தால் எனக்கு போதும்- என்னால எல்லாமே முடியும். முந்தி எல்லாம் நான் தனியவே எல்லாத்தையும் 100% செய்வன் என்ற நம்பிக்கை இருந்தது.
ஏனோ தெரியல எனக்கும் ஒரு வாழ்க்கை துணை தேவை என்று நான் நினைத்த நேரம் ஒரே ஒரு நிமிஷம் தான். எனக்காக உயிரையே தரக்கூடிய நண்பன் என்னை தன் உயிருக்கு நிகராக விரும்புறார் என்று தெரிஞ்ச பிறகும், அவரை விட ஒரு சிறந்த வாழ்க்கைத் துணை எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்தால் அது என் மடைத்தனம். "உங்களை கலியாணம் கட்டி உங்களோட காலம் பூராவும் வாழ விரும்புறன்" என்று சொல்லிய அந்த கணமே, நான் என் எல்லா விசயத்திலும் என்னோடு பங்கெடுக்க இப்படி ஒருவரை என்னால தெரியவே முடியாது என்று எவ்வளவு சந்தோசப் பட்டன்.
இப்பவும், எப்பவும் என் தெரிவை நினைச்சு நான் ரொம்ப பெருமை படுறன், ஏனென்றால் என்னை விரும்பின எல்லாரும் எனக்காக எதையும் செய்ய தயாரா இருந்தவை என்பது உண்மை என்றாலும், என் தங்கம் எனக்காக உயிரையே குடுக்க தயாரா இருந்தவர். கூடவே பிறக்காத இடையில ஓட்டிடு பிரிஞ்சு போற ஒரு தங்கைச்சிகாக இப்படி இருக்கிற அண்ணனை யாரவது இழப்பாங்களா? பிரிவே இல்லாத உறவா அவர் கூடவே என் கடைசி கணம் வரை இருக்கோனும் என்று நான் எடுத்த முடிவு என்றைக்கும் பிழையானதாக இருக்க மாட்டுது.
ஆனாலும் ஏன் என் அண்ணா இப்ப எல்லாம் என்னை வெறுப்ப பார்க்கிறார் போல எனக்கு தோன்றுது? நான் அவரிட்ட எதிர் பார்க்கிற, அவர் தன் தங்கைக்கு காட்டிய அந்த பரிசுத்தமான அன்பு இப்ப மனைவியா, அவர் காதலியா எனக்கு கிடைக்கவில்லை என்று என் மனம் எதோ விசர் மாதிரி யோசிக்குது. எனக்கே புரியவில்லை. ஆனாலும் என் தங்கம் எனக்கு மட்டும் தான் என்றைக்கும். எப்பாவது எனக்கு கிடைக்க மாட்டார் என்று தெரியுதோ, அதுக்கு பிறகு நான் உயிர் வாழமாட்டன். அம்மா, அப்பா, அக்கா, தம்பி அதோட ஈழம், என் மக்கள், என் உறவுகள் என்று உணர்ச்சி பூர்வமா நான் கதைக்கும் போதெல்லாம், என் நண்பர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லை- நீ மாறிடுவாய்- என்று பல முறை சொல்லும் போதெல்லாம், எப்படி என்னால மாற முடியும் என்று வியந்திருக்கன். இப்ப எல்லாம் என் ஒவ்வொரு அணுவும் என் தங்கம் என்று மட்டும் சொல்லி துடிக்கிறதை பார்க்கிறான், அனுபவிக்கிறான். இப்ப நான் எப்படி இப்படி மாறினான் என்று வியக்கிறன்.
//

4 comments:

  1. ///அம்மா, அப்பா, அக்கா, தம்பி அதோட ஈழம், என் மக்கள், என் உறவுகள் என்று உணர்ச்சி பூர்வமா நான் கதைக்கும் போதெல்லாம், என் நண்பர்கள் நடைமுறைக்கு சாத்தியமில்லை- நீ மாறிடுவாய்- என்று பல முறை சொல்லும் போதெல்லாம், எப்படி என்னால மாற முடியும் என்று வியந்திருக்கன். இப்ப எல்லாம் என் ஒவ்வொரு அணுவும் என் தங்கம் என்று மட்டும் சொல்லி துடிக்கிறதை பார்க்கிறான், அனுபவிக்கிறான். இப்ப நான் எப்படி இப்படி மாறினான் என்று வியக்கிறன்.///

    எனக்காக அவள் தன் சுயத்தை இழந்ததை என்னால் ஏற்க முடியவில்லை.. நானும் என் சுயத்தை இழக்க விரும்பவில்லை... முடிவு அவள் தன் சுயத்தை நிரூபித்தே விட்டாள்.. ஆனால் நான் இன்னும் (தங்கம் பிளாட்டினமா மாறினது மட்டும் தான் ) வெட்டி பேச்சு தான்...இப்ப கொஞ்ச நாளா தீவிரமா யோசிக்கிறான்... ஆனால் நேரடியா இணைய எல்லா வழியும் அடைபட்ட மாதிரியும், எனக்கு வேற மாதிரி வேலை தான் பொருத்தம் என்ற மாதிரியும் முடிவுகள் தரப் படும் போது... எச்சில் விழுங்க மட்டுமே முடிகிறது...
    எதோ சிவனே...

    ReplyDelete
  2. im sry im not gettin it... who is she. what she is trying to say.

    ReplyDelete
  3. ஆஹா...பிளாட்டினம்..பின்னிடீங்கள்...கலக்கல் கடிதம்... இயல்பு நடையிலை உங்கடை மனசுக்கு ஏத்த மாதிரி தங்கம் போல அமைஞ்சிருக்கு... பகிர்வுக்கு நன்றிகள்...தொடர்ந்தும் பிளாட்டினம் மாதிரி நெளிஞ்சு போகாமல் எழுதுங்கோ:)

    ReplyDelete
  4. thanks kamal. but again i'm reposting ur link.. vcoz, ur recoding may mislead... others should read the all comments and find out the misleading of pullad paandi + appukuddy +u.

    ReplyDelete