Tuesday, April 28, 2009
Sunday, April 26, 2009
விடுதலையான உதயன் ஆசிரியரின் பேனாவிலிருந்து...
அன்புமிக்க வாசகப் பெருமக்களே! நீண்ட எட்டு வாரகால தடுப்புக் காவலில் இருந்து நான் மீண்டுள்ள நிலையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன். வெள்ளை வானில் வந்த ஆயுத பாணிகளின் அராஜகப் பிடியில் சிக்கி, கண்கள் கட்டப்பட்டு, பின்பக்கம் மடக்கிக் கைவிலங்கிடப்பட்டு, தாக்குதல்களுக்கு இலக்காகி அவலப்பட்ட அந்த இரண்டு மணிநேரக் கொடூரமும் பின்னர் அக்கடத்தல், "கைது" ஆக மாற்றப்பட்டு தடுப்புக் காவலில் அனுபவிக்க நேர்ந்த இரண்டு மாத கால அவஸ்தையும் ஒருவாறு இப்போதைக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன். |
அடிப்படையோ, ஆதாரமோ அற்ற அபத்தக் குற்றச்சாட்டுகளின் பேரில் தமிழ்ப் பத்திரிகை உலகின் மூத்த பத்திரிகையாசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இரண்டு மாத காலத்துக்கு அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றார் என்பது இன்று அப்பட்டமாகி யிருக்கின்றது; அம்பலமாகியிருக்கின்றது. இந்தக் கைதும், அது இடம்பெற்ற முறையும், இடம்பெற்ற வேளையும், அதையொட்டி என்மீது அதிகார வர்க்கத்தினால் அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், இவ் விடயத்தையொட்டிய விசாரணைகள் சுமார் இரண்டு மாத காலத்துக்கு இழுத்தடிக்கப்பட்ட போக்கும் இந்த அதிகார அராஜக அத்து மீறலின் பின்னணியில் அரசியல் உள் நோக்கமும் பழிவாங்கலும் பிரதான காரணங்களாக இருந்தன என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமானவை. பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து இலங்கை விடுவிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக்கோரமான பேரவலத்தையும் பேரனர்த்தத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கும் பெருந்துயர்மிக்க இச்சமயத்தில், இந்தக் கொடூரங்கள் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாகவும், கூர்ந்தும் அவதானிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ள இச்சூழலில் தம் இன மக்களின் பேரவலம் பற்றிய உண்மை நிலையையும் யதார்த்தத்தையும் உலகுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் முரசறைந்து உணர்த்தும் களப்பணியில் வர லாற்றுப் பொறுப்பில் கண்துஞ்சாது ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு பத்திரிகை ஆசிரியர், அச்சமயத்தில் அப்பணியில் ஈடுபடவிடாது திட்டமிடப்பட்ட வகையில் தடுக்கப்படும் விதத்தில் தடுப்புக்காவலில் கம்பி எண்ணவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார். இனப்பிரச்சினையையொட்டிய யுத்தம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள இச் சமயத்தில் அது குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும், களநிலைமை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய செய்தி மூலமாகத் திகழ்பவர்கள் என்போன்ற ஊடக உயர் மட்டத்தினரே என்பது வெளிப்படையானது. அத்தகைய முக்கிய பொறுப்பில் இருப்பவரை இச்சமயத்தில் அபத்தமான குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தமையும் கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கொழும்பு வரை தமது விமானத்தில் வந்து தாக்குதல் நடத்திய புலிகளின் நடவடிக்கையுடன் நான் தொடர்புபட்டிருந்தேன் என்பதே அரசின் அதிகார தலைமையினால் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஓர் ஊடகவியலாளன் என்ற முறையில் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக, செய்தித் தரப்புகளோடு தொடர்பு கொண்டு, தகவல்களைச் சேகரித்து வெளியிட்டமை தவிர அதற்கு அப்பால் இவ்விடயத்தில் நான் சம்பந்தப்படவுமில்லை; அத்துமீறிச் செயற்படவுமில்லை. இப்போது அது விசாரணைகளில் தெட்டத் தெளிவாக உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது; உண்மை வெளியாகியிருக்கின்றது. எம்மைப் பொறுத்த வரையில் செய்தியாளர்கள் என்ற முறையில், அரச மற்றும் படை உயர் மட்டங்களில் இருந்து, ஏனைய அனைத்துத் தரப்பினர்களுடனும் செய்திகளுக்காகத் தொடர்புகளை பேணுவது எமது தவிர்க்க முடியாத பணியாகிறது. அத்தகைய கடமைப் பொறுப்புகளுக்கப்பால் எத்தகைய தவறான அல்லது சட்ட விரோதமான செயற்பாடுகளையும் நான் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மையானதாகும். அன்றையதினம் எனக்கு வந்த அல்லது நான் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்தே முதலில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் உள்ளூரிலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்து வந்த அல்லது நான் அவற்றுக்கு மேற்கொண்ட சுமார் இருநூறு வரையான தொலைபேசி அழைப்புக்களின் மூலத்தைக் கண்டறிவதற்கு மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒருவாரகால அவகாசம் அதிகம். ஆனால் அந்த ஒரு வார காலத்துக்குள்ளேயே மேற்படி தாக்குதல் சம்பவ சமயத்திலோ அல்லது அதற்கு முன்னர் சுமார் இரண்டு மாத காலத்திலோ குற்றமிழைக்கப்பட்டதாகக் கருதப்படக்கூடிய தொலைபேசி அழைப்புகளுடன் நான் சம்பந்தப்பட்டேன் என்று சந்தேகிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை என்பதை என்னை விசாரணை செய்த பொலிஸார் உறுதிப்படுத்திக்கொண்டு விட்டனர். தொலைபேசி அழைப்புகள் பற்றிய விசாரணை முடிந்ததும் எனது வங்கிக் கணக்குகள் துருவப்பட்டன. எனது மனைவியின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. "பயங்கரவாதிகள்" மூலம் தவறான வழியில் நான் வருமானம் ஏதும் ஈட்டிக்கொண்டேனா என்பதைக் கண்டறிய எனது சொத்துக்கள், உடைமைகள் ஆய்வு செய்யப்பட்டன. நான் விற்ற, வாங்கிய சொத்துகள் குறித்தெல்லாம் விசாரிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சகல சமாதானப் பேச்சுகளின் போதும் ஊடகவியலாளன் என்ற முறையில் நேரில் பிரசன்னமாகி செய்தி சேகரிக்கும் தனித்துவமான வாய்ப்பு எனக்குக் கிட்டி வந்திருக்கின்றது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளுக்கும் பல தடவைகள் பயணம் செய்திருக்கின்றேன். தவிரவும் மூத்த ஊடகவியலாளருள் ஒருவன் என்ற முறையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கின்றேன். இந்த வகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பல்வேறு வெளிநாட்டுப் பயணங்கள், அவற்றின் காரணங்கள், அதற்கான நிதி மூலம் குறித்தெல்லாம் துருவினார்கள். என்னைப் "பயங்கரவாதி" ஆகப் பிரகடனப்படுத்தும் அதிகாரத் தரப்பின் பகிரங்கக் கருத்து வெளிப்பாடு, அவற்றின் பின்புலத்தில் புதைந்து கிடக்கும் சூக்குமங்கள், அபத்தமான குற்றச் சாட்டுகள் போன்றவை மொத்தத்தில் நகைப்புக்கிடமானவை. அவற்றை விவரிப்பின் அது நீண்டு செல்லும். எனக்கு நேர்ந்த இந்த அவலத்துக்காக யாரையும் பழிவாங்கும் வெஞ்சினம் எனக்குக் கிடையாது. அத்தோடு இன்று எமது தமிழ்ச் சகோதரர்கள் அனுபவிக்கும் பேரின்னல்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு நேர்ந்த அவல அனுபவம் பெரும் சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே. ஆனால், இத்தகைய அழுத்தந் தரும் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்கள் என்ற முறையில் நானும் "உதயன்", "சுடர்ஒளி" தினசரிகளில் என்னுடன் பணியாற்றும் எனது சக ஆசிரியபீட ஊழியர்களும், ஏனைய அலுவலர்களும் மற்றும் நிர்வாகத்தினரும் அவ்வப்போதும் தொடர்ந்தும் எம்மால் இயன்றவரை எமது கடமைகளைத் தொடர்வோம் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உறுதி கூறுகின்றேன். கொழும்பில் இரண்டு மாதகாலம் நான் தடுப்புக் காவலில் கைதியாக வைக்கப்பட்டிருந்தேன் என்பது உண்மைதான். ஆனால், யாழ்ப்பாணத்தில் தங்கள் உயிர்ப் பாதுகாப்புக்காக "உதயன்" ஆசிரியர் பீடத்தின் தூண்களான இரு உயர் அலுவலர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக "உதயன்" அலுவலகத்துக்குள் தங்களைத் தாங்களே முடக்கி சிறைக் கைதிகளாக வைத்துக்கொண்டு ஆற்றும் பணியில்தானே உங்கள் "உதயன்" திட்டமிடப்பட்டு, இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களைக்கூட எதிர்கொண்ட பின்னரும் தவறாது வெளிவந்துகொண்டிருக்கின்றான் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா? நன்றி இந்த நெருக்கடியான சமயத்திலும் எம்முடன் தோள் கொடுத்து ஆதரவு தந்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன். * எத்தகைய நெருக்கடி வரினும் அஞ்சாது பத்திரிகையைத் தவறாது வெளியிட வேண்டும் என்ற தமது நெஞ்சுரத்தை, படுகொலை இரத்தக் களரிகளுக்கு வழிவகுத்த அனர்த்த சம்பவங்களுக்கு நேரடியாக முகம் கொடுத்தசமயங்களில் கூடத் தயங்காது வெளிப்படுத்தி வரும் தமது வழமையான, துணிச்சல்மிக்க பாரம்பரியத்தை,எமது சக ஊழியர்கள் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தமது ஆசிரியரை சீருடையினர் சகிதம் வெள்ளை வானில் வந்தோர் கடத்தி, அச்சுறுத்தி அதிர்ச்சி தந்த நிலையிலும் அவரைப் "பயங்கரவாதி" ஆகக் குற்றம் சுமத்தி முன்னிலைப்படுத்தியும்கூட தமது கடமையைத் தவறவிடாது தங்களை சுதாகரித்துக்கொண்டு ஒருநாள் பின்னடைவுதன்னும் காட்டாமல் அதே தரத்தோடும், வீச்சோடும், உறுதித் தெளிவோடும் இச்சமயத்தில் "உதயன்", "சுடர் ஒளி" நாளிதழ்களைத் தவறாமல் வெளியிடுவதை உறுதி செய்த தைரியம்மிக்க எமது நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் * தடுப்புக் காவலில் இருந்த என்னை நேரில் வந்து சந்தித்து உற்சாகப்படுத்திய பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் போன்றோருக்கும் * நான் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து எனக்காகக் குரல் எழுப்பிய உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், ஊடக அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், பல் வேறு சமூக அமைப்புகள் ஆகிய தரப்பினருக்கும் * என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டமை தொடர்பான விசாரணைக்காகப் பொலிஸாருக்கு ஒத்துழைத்த எனது நண்பர்கள், செய்தி மூலகங்கள், உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் போன்ற தரப்பினருக்கும் * என்னுடைய வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற கொடுப்பனவுகள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுக்க உதவிய "இன்டர்போல்" நிறுவனத்துக்கும் *என்னுடைய விடுதலைக்காக வற்புறுத்தி அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுத் தூதரகங்கள், இராஜதந்திரிகள் * இரண்டு மாதத் தடுப்புக் காவலின் போது என்னைக் கௌரவத்துடன் நடத்தி, மரியாதை பேணி, அனுசரித்து நடந்த கொண்ட கொழும்பு குற்றவியல் பிரிவு இயக்குநர் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் அவரின் கீழ் பணியாற்றிய பொலிஸ் குழுவினருக்கும் * நான் தடுப்புக்காவலில் வாடிய வேளை எனது குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு தைரியமும், உற்சாகமும் ஊட்டி தார்மீக ஆதரவு தந்த உள்ளூர் நண்பர்கள், உறவினர்கள், வெளிநாட்டு ஆர்வலர்கள் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள். உங்கள் ஆசி மற்றும் ஆதரவுடனும், "உதயன்", "சுடர்ஒளி" சக ஊழியர்களின் ஊக்கத்துடனும் எனது ஊடகப் பணி தொடரும் என உறுதி கூறுவதுடன், அதற்கு இறைவனின் அருளையும் இறைஞ்சுகின்றேன். ந.வித்தியாதரன் |
Wednesday, April 22, 2009
4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...
பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -
இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -
கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.
காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.
வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.
தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.
போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.
சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.
வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.
இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.
"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.
மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.
ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.
இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.
'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.
ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.
எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.
சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.
யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.
இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.
சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.
'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.
உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.
"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.
புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.
இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.
புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.
ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.
விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.
இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.
புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.
எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:
ஒன்று -
தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -
சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -
தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.
இரண்டாவது -
அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.
எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.
உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.
'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.
இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.
நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.
2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.
ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.
அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.
இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.
உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.
இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.
எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.
அதுதான் - "Post Conflict Scenario"
இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -
முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.
நான்கு விடயங்கள் முக்கியமானவை:
ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.
இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.
மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.
நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.
இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.
இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.
இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.
எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.
அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.
அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.
அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.
ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.
இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.
இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.
- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -
- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -
- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.
வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.
ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.
எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....
படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;
எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;
தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து!
தி.வழுதி
கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: t.r.vazhuthi@gmail.com
Monday, April 20, 2009
எனக்குப் பின்னரும் மேலும் ஓர் நாற்பது ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்கு தேவையான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையுமே நான் செய்துகொண்டிருக்கி
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அலட்டல் இல்லாத இயல் பான ஆளுமையும், எளிமையும் மனதில் ஆழப்பதிந்து நினைவினின்று அகல மறுக்கிறது. குளிர்வசதி, மின்விசிறி இல்லாத அறையில்தான் நேர்காணல் நடந்தது.
Friday, April 10, 2009
ஏன் எமக்கு மட்டும் இந்த நிலை? களத்தில் குதிக்க களத்தை நாமே அமைக்கலாம்
ஆயிரம் ஆயிரம் படை வரினும் அறமும் வீரமும் தோற்காது. ஆனால் அறமும் வீரமும் பதுங்கி இருந்தால், எதிரி பாய நினைப்பது வழமை தானே. செய்ய நினைத்தால், முடியாதது எதுவும் இல்லை.
காலத்தின் கட்டாயம் உங்களை சரியாக வழி நடத்துதா என்று ஒரு முறை சிந்தித்தால், மறுமுறை வழி தெரியும். போராட்டம் என்பது அரசியலையும் உள்ளடக்கியது தானே. உங்களால் ஒரு சிலருக்காவது, எங்கட போராட்டத்தின் நியாயங்களை எடுத்து சொல்லி முடிந்தால் அவர்களை புரிந்து கொள்ள வைத்தால் அதுவே பெரிய வெற்றி.
இன்றைக்கு உலகம் முழுவதுற்கும் தமிழ் ஈழம் என்ற ஒரு நிலப்பரப்பு ஈழத்தில இருக்கு, அது தன்னாட்சி உரிமை உடையதாய் இருக்க வேண்டும் என்ற நியாயம் விளங்க நாங்க சொல்லுறது தான் காரணம். ஒருத்தரும் தாங்களா எங்களை புரிந்து கொள்ள மாட்டினம். எங்களுக்கு உள்ளேயே சிலருக்கு, முன்னர் பலருக்கு இது புரியவில்லை. இப்ப என்னால முடிந்தது அந்த சிலரை திருத்துவது தான்.
எங்கையாவது ஒரு துரோகித் தமிழனை, எங்கட இந்த அபிலாசைகளை விட்டுடு நக்கித் தின்னும் சொற்ப ஆசைகளுக்காக அலைபவனை காண நேர்ந்தால், முதலில் அந்த துரோகியை மாற்றுங்கள், இல்லை அழியுங்கள். என்னால் எதுவுமே முடியாத நிலையில் இருந்து கொண்டு நான் இதை செய்யவில்லையா. கோவப் படமால் சக தமிழனுக்கு பிரச்சனையின் யதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனெனில் எல்லோருக்கும் சுயமா சிந்திக்க தெரியாது. தீர்க்கதரிசி ஒருவரின் கொள்கையை பிரதிபலிப்பதன் நயம் புரியவைத்தால் தான் புரியும். இந்த 30 வருசமா எங்கட தலைவரின் வழிநடத்தல் செய்த மற்றம் தான் உலகெங்கும் ஒலிக்கும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் என்ற முழக்கம். ஒரு சிலர் பகற்கனவு என்பது போல இன்னும் கதைக்க என்றே இருப்ப்பினம், அவர்களை முதல்ல கண்டு பிடிச்சு மாற்ற வேணும் இல்லை ஒழிக்க வேணும். இதையும் செய்து வென்றிட்டம் என்றால் எதிரி - துரோகியை விட - பலமிழந்தவன் தான்.
எதையும் வெளிப்படையா செய்ய முடியாத இடத்தில இருக்கிற நாங்கள் எப்ப பாதை திறப்பினம் என்று பார்க்கிற மக்களுக்கு, எங்கட உயிர் குடிக்கும் இராணுவ பேய்களின், தமிழ் துரோகியின் விமானத்தில் பறந்தாவது இலக்கை அடைய நினைக்கும் அப்பாவிகளை, நினைத்தால் நெஞ்சு பொறுக்காது தான்.
ஆனால் எங்களுக்கு எப்படி பட்ட தீர்வு வேணும் என்று வாக்கெடுப்பு நடந்தா இந்த அறிவிலிகளும், அற்ப ஆசை விரும்பிகளும் தான் முக்கிய பங்கு எடுப்பினம். அதல நாங்க இப்பவே அது பற்றி யோசிக்கோணும். இரகசிய இல்லை உள்விட்டுக்குள் பிரச்சாரம் ஒன்று கட்டாயம் தேவை.
உங்களால இயன்ற வரை இதையும் இப்பவே செய்தால், எப்பவும் நாங்கள் 99% ( எட்டப்பனை மாற்ற முடியாது தான், ஆனால் அவன் கூட்டாளிக்கு அவன் அற்ப தனத்தையும் எங்கள் தியகத்தனத்தியும் புரிய வைக்கலாம்) ஆதரவோடு ஜெயிச்சதா வரலாறு சொல்லும்.